சித்தப்பாவுக்கு ஆசைப்பட்டு சின்னாபின்னமான வாழ்க்கை.! மறுவீட்டுக்கு வந்து போது நடந்த விபரீதம்..
  • 10:10AM Nov 15,2018 Theni, Tamil Nadu, India
  • Written By AP
  • Written By AP
  • 10:10AM Nov 15,2018 Theni, Tamil Nadu, India

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கிராமத்தில் தனியார் பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் ரம்யா. இவர் தனது சித்தப்பாவானா முத்துக்கிருஷ்ணன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.இதில் ஆச்சரியப்பட வேண்டியது என்னவென்றால் இந்த பெண்ணின் சித்தப்பாவான முத்துக்கிருஷ்ணனும் காதலித்துவந்துள்ளார். இந்த விஷயம் ரம்யாவின் பெற்றோர்களுக்கு தெரியவரவே, ரம்யாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டனர்.இதனையறிந்த ரம்யயாவும் முத்துக்கிருஷ்ணனும் விரக்தியில் இருந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரம்யா தனது கணவருடன் மறுவீட்டுக்கு வரவே,ரம்யா தனது சித்தப்பாவை பார்த்துள்ளார்.காதல் நினைவுகள் இருவரையும் வாட்ட, இனி வேறு ஒருவருடன் வாழ்வதை விட தற்கொலை செய்து கொள்வதே மேல் என இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இந்த விவகாரம் தெரிந்து இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் பெற்றோர்.ரம்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது காதலரான முத்துக்கிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Top