Shoreline

நம்ப மூஞ்சிய பாக்குறதுக்கு நமக்கே பயமா இருக்குறது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் கூட பொருந்துமோ? தன்னைத்தான் பார்த்த போது என்ன நடந்தது அந்த ஜீவனுக்கு?

Jun 04 2021 07:58:00 AM

கண்ணாடியில் எவ்வளவு நேரம் நம் முகத்தை பார்த்தாலும் நமக்கு பிடிக்கவே பிடிக்காது. இன்னொருவரின் முகத்தை போல நம் முகம் இல்லையே அவரைப்போல நாம் வெள்ளையாக அழகாக இல்லையே என்று தான் எல்லோருக்கும் நினைக்க தோன்றும். இது மனிதர்களின் இயல்பான சுபாவம் ஆகும். மனிதர்கள் மட்டுமல்ல சில சமயம் விலங்குகள் கூட தங்களின் முகத்தை தண்ணீரில் பார்க்கும்போது பயப்படுவதும் இயல்பு தான்.

giraffee-mirror

இங்கு ஒரு விலங்கு தன்னுடைய நிழலை பார்த்து வியந்திருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மொனார்டோ விலங்கியல் பூங்காவில் ஒட்டகங்கள் இருக்கின்றது. இதில் ஒரு ஒட்டகத்தின் பெயர் தான் கொராங்கோ. இந்த ஒட்டகம் சமீபத்தில் தான் ஒரு குட்டியை ஈன்றது. பிறந்த சில நாட்கள் கூண்டிற்குள் இருந்த அந்த குட்டி பிறகு வெளியே வர ஆரம்பித்தது. அந்த சமயத்தில் வெயிலால் நிழல் விழுவதை கவனித்தது அந்த ஒட்டகம்.

giraffee-mirror

வெயில் காரணமாக தன்னுடைய உருவம் நிழலாக தெரிவதை கண்டு வியந்து போன அந்த ஒட்டக குட்டி செய்த செயல்களை வீடியோவாக பதிவு செய்தனர் பூங்காவை சேர்ந்த ஊழியர்கள். நிழலை பார்த்து பல வித பாவனைகள் செய்த அந்த ஒட்டக குட்டி அது தன்னுடைய உருவத்தின் பிரதிபலிப்பு என்று புரிந்து கொள்ளாமல் அதனுடன் சேட்டைகள் செய்தது. இந்த குட்டி ஒட்டகத்தின் சேட்டைகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டது. இதைப்பார்த்த பலரும் அந்த குட்டி ஒட்டகத்தை ரசித்து மகிழ்ந்தனர்.