Exquisite

யார் இங்கு அழையா விருந்தாளி? ஹோட்டலே இவரு பேருல தான் தம்பி நடக்குது! இவருக்கு இல்லாத உரிமையா?

Jul 04 2021 09:08:00 AM

உலகத்தின் எந்த இடத்திலும் ஒட்டகச்சிவிங்கள் இவ்வளவு உரிமை எடுத்துக்கொண்டு ஒரு ஹோட்டலுக்குள் நுழைவது நாம் சற்றும் எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வாகும். ஒட்டகச்சிவிங்கி மேனர் நைரோபியின் மிகச் சிறந்த கட்டிடங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இது ஒரு வித்தியாசமான ஹோட்டல் ஆகும்.

giraffe-manor hotel-in-nairobi

இந்த ஹோட்டலின் நேர்த்தியானது 1930 களில் ஐரோப்பிய பார்வையாளர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு சபாரிகளை அனுபவிப்பதற்காக முதன்முதலில் திரண்டதை நினைவுபடுத்துகிறது.  இந்த ஹோட்டலின் அழகிய முகப்பில் நேர்த்தியான உள்துறை, பழமையான பச்சை தோட்டங்கள் மற்றும் மகிழ்ச்சிகரமான முற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு இருப்பதால் விருந்தினர்கள் பெரும்பாலும் அவுட் ஆப் ஆப்பிரிக்கா திரைப்படத்திற்குள் செல்வதைப் போன்ற அனுபவம் கிடைப்பதாக குறிப்பிடுகின்றனர்.

giraffe-manor hotel-in-nairobi

இருப்பினும் இந்த அசாதாரண ஹோட்டலைப் பற்றி மிகவும் கவர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் காலையிலும் மாலையிலும் வருகை தரும் ரோத்ஸ்சைல்ட் ஒட்டகச்சிவிங்கிகள் தான். தங்கள் வன சரணாலயத்திற்கு திரும்புவதற்கு முன்பு விருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்கள் நீண்ட கழுத்தை ஒட்டகச்சிவிங்கிகள் இந்த ஹோட்டலின் ஜன்னல்களுக்குள் நுழைக்கின்றன.

giraffe-manor hotel-in-nairobi

அதற்கு தகுந்தாற்போல நல்ல விருந்தும் கிடைப்பதால் இந்த ஒட்டகச்சிவிங்கிகள் ஜன்னல்களுக்குள் கழுத்தை நுழைத்து உணவு சாப்பிடுவதை தினமும் ஒரு பழக்கமாகவே வைத்திருக்கின்றன. உலகில் வேறு எந்த இடத்திலும் இப்படி ஒரு அனுபவம் இங்கு வரும் விருந்தாளிகளுக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.

giraffe-manor hotel-in-nairobi

நீங்கள் விரும்பினால் உங்கள் உணவை ஒட்டகச்சிவிங்கியுடன் பகிர்ந்துகொள்ள முடியும். அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியும். ஒட்டகச்சிவிங்கியின் இந்த வினோத செயல் மற்றும் அதன் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பின் காரணமாக அதன் பெயரிலேயே இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.