Exquisite

வாரத்துல ஒரு நாள் தானடா சந்தோசமா இருப்போம் அதுக்கும் இப்படி ஒரு ஆப்பா ?

Apr 22 2021 07:54:00 PM

ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாளாக பெரும்பாலும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. வாரம் முழுக்க உழைத்து களைத்த மக்கள் ஒரு நாள் நிம்மதியாக ஓய்வு எடுக்க விரும்புவர். ஒரு சிலர் வீட்டில் படுத்து உறங்குவர். சிலர் வெளியில் சென்று சந்தோசமாக சுற்றித்திரிவர். இது தான் வழக்கம். ஆனால் ஜெர்மனியில் கதையே வேறாக இருக்கிறது.

german-sunday

ஜெர்மனி நாட்டில் ஒரு விநோதமான சட்டம் இருக்கிறது. வார நாட்களில் இரவு 10 மணிக்கு மேல் சத்தம் போட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுமட்டுமல்ல ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் முழுவதும் அமைதியாக தான் இருக்க வேண்டும். அதை மீறி அதிக சத்தம் காரணமாக யாராவது பாதிக்கப்பட்டால் சத்தம் போட்டவருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். இதற்கு விதிக்கப்படும் அபராதம் 60,300 டாலர்கள். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 44 லட்சம் என்றால் பாருங்களேன்.

german-sunday

ஞாயிறன்று அங்கு இருக்கும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். அன்று கூட்டம் கூடி கும்மியடிப்பது, நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை, திரைப்படம் என எது செய்வதாக இருந்தாலும் சத்தமே வரக்கூடாது. வீட்டை சுத்தம் செய்வது, கார் அல்லது இரு சக்கர வாகனத்தை கூட கவனமாக கழுவ வேண்டும். சிறிது சத்தம் கேட்டாலும் கண்டிப்பாக அபராதம் செலுத்தியாக வேண்டும். அக்கம் பக்கத்து வீட்டில் இருக்கும் நபர் இவரால் சத்தம் அதிகமாக வருகிறது என்று புகார் கொடுத்துவிட்டால் தப்பிக்க வேறு வழியே கிடையாது. அபராதத்தை செலுத்திவிட்டு மீண்டும் சத்தம் போடலாம் என்று நினைக்க வேண்டாம். இரண்டாவது முறை சத்தம் கேட்டால் இரண்டாவது அபராதம் கட்ட வேண்டும். இந்த காரணத்தால் ஜெர்மனி நாட்டு மக்கள் இதுவரை ஞாயிற்றுகிழமையை  கொண்டாடியது கிடையாது.