Highrise

என்னடா மேட்டர் புஷ் ஆயிடுச்சுன்னு நினைக்காதீங்க! புஷ் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருப்பது மறந்து போயிடுச்சா?

Sep 11 2021 05:41:00 PM

அமெரிக்க அதிபர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஜார்ஜ் புஷ். இவரைப்பற்றி பேசுவதென்றால் ஒரு நாள் முழுக்க பேசிக்கொண்டே இருக்கலாம். இன்று நாம் பேசப்போவது இவரைப்பற்றி கிடையாது. இவர் பெயரில் இயங்கும் ஒரு விமான நிலையத்தை பற்றி தெரிந்து கொள்ளவிருக்கிறோம். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பெயரில் இயங்கும் விமான நிலையம் எங்கு இருக்கும் என்ற குழப்பமே நமக்கு தேவையில்லை. இந்த விமான நிலையம் அமெரிக்காவில் தான் அமைந்துள்ளது.

george-bush inter-continental-airport texas-houston united-states

ஜார்ஜ் புஷ் இன்டர் கான்டினென்டல் விமான நிலையம் என்பது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள சர்வதேச விமான நிலையமாகும். இது ஹூஸ்டன் பெருநகரத்திற்கு விமான சேவையை வழங்குகிறது.

george-bush inter-continental-airport texas-houston united-states

ஜார்ஜ் புஷ் இன்டர் கான்டினென்டல் விமான நிலையம் ஏராளமான உள்நாட்டு விமானங்களை இயக்குகிறது. இது டெக்சாஸின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாகும். இந்த விமான நிலையம், முதலில் ஹூஸ்டன் இண்டர்காண்டினெண்டல் விமான நிலையம் எனப் பெயரிடப்பட்டது. பிறகு அந்த விமான நிலையத்துக்கு முன்னாள் அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ்ஷின் பெயர் வைக்கப்பட்டது.

george-bush inter-continental-airport texas-houston united-states

இந்த விமான நிலையம் 10,000 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கியது. இது மட்டுமல்லாமல் ஐந்து ஓடுபாதைகளையும் இந்த விமான நிலையம் கொண்டுள்ளது. ஹூஸ்டன் இன்டர் கான்டினென்டல் விமான நிலையம் யுனைடெட் ஏர்லைன்ஸின் மிகப்பெரிய பயணிகள் மையமாகும். தினமும் சராசரியாக இந்த விமான நிலையத்தில் 45000 பயணிகள் பயணம் செய்யுறாங்க என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

george-bush inter-continental-airport texas-houston united-states

வருடத்துக்கு சராசரியாக சுமார் 16 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையம் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். இதுல என்ன ஆச்சர்யம் என்று உங்களுக்கு நினைக்க தோன்றலாம். வெளியில இருந்து பாக்குறதுக்கு சுவாரசியம் இல்லாத மாதிரி தெரியும். ஆனால் அமெரிக்காவில் இதுதான் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமாகும். மேலும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பெயரில் செயல்பட்டு வருவதே இந்த விமான நிலையத்துக்கு ஒரு தனிச்சிறப்பு தானே.