#Viral : கிரிக்கெட் வீரர் ரசலை நடிகை காயத்ரி திருமணம் செய்துகொண்டாரா ?
  • 07:42AM May 23,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 07:42AM May 23,2019 Chennai

நடிகை காயத்ரி.தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானலும்  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் வாயிலாகதான் மக்கள் மத்தியில் பிரபலமானார் . கதாநாயகியாக தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் அனைத்து வகை ரோல்களையும் ஏற்று திறமையாக  நடிப்பவர். இதற்கு சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் அழுத்தமான கதாபாத்திரமே சான்றாகும்,

gayu1.jpg

ஐபில் இல் கொல்கத்தா டீம் சார்பில் ஆடி வரும் மேற்கிந்திய தீவுகளின் ஆல் ரௌண்டார் ஆண்ட்ரே ரஸ்ஸல்.  இவர்  கடந்த 2016 இல் ஜமைக்காவில் மாடலாக உள்ள ஜஸிம் லோரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஜஸிம் லோரா இன்ஸ்டாகிராமில் பாஷன் லைப் ஸ்டைல் பற்றி அதிகமான பதிவிடுவார் இவருக்கு கணிசமான அளவு பாலோவர்ஸ் உள்ளனர்

 சமீபத்தில் நடந்த இ பி எல் லில் மும்பைக்கு எதிராக விளையாடி  மேன் ஆப் தி மேட்ச், விருதை பெற்றார். அப்பொழுது ஐபில் டி 20 இணையதளத்திற்கு இவர் மனைவி பேட்டி கொடுத்தார் . மேலும் தன் கணவரின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்களையும் அப்லோட் செய்தார்.

ரஸ்ஸல்லின் மனைவியை பார்த்த நம் நெட்டிசன்கள் அவர் நடிகை காயத்ரியின் முகசாயலில் உள்ளதால்  ஸ்டேட்டஸ், மீம்ஸ் என்று .வைரலாக்கினர்

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top