Misc

இது வண்டா இல்ல காண்டாமிருகமா? காண்டாமிருகம் பூச்சி வடிவத்தில் பிறந்தா இப்படித்தான் இருக்குமோ?

Jun 06 2021 08:57:00 AM

காண்டாமிருகம் மிகவும் சக்தி வாய்ந்த விலங்கு என்பது நமக்கு தெரிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இந்த காண்டாமிருக வண்டு அப்படியே காண்டாமிருகத்தை ஜெராக்ஸ் எடுத்ததை போல இருக்கிறது. வண்டுக்கு உண்டான இயல்பான தோற்றத்திலிருந்து மாறுபட்டு காண்டாமிருகத்தை போன்ற தோற்றத்தில் உள்ளது.

gandamiruga-vandu

இந்த வகை வண்டுகளில் மொத்தம் 1500 இனங்கள் உள்ளது. இருப்பினும் இதுவரை 225 இனங்கள் மட்டுமே மனிதர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வண்டுகளின் ஆயுட்காலம் சராசரியாக 3 முதல் 6 மாதங்கள் தான். இந்த வண்டுகள் 15 சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும். இந்த வண்டு மனிதர்களை கடிப்பது கிடையாது.

gandamiruga-vandu

பார்ப்பதற்கு காண்டாமிருகத்தின் தோற்றத்தை கொண்டிருந்தாலும் அளவில் சிறியதாக சாதாரண வண்டை போலத்தான் இருக்கிறது. இந்த வண்டின் சிறம்பம்சம் என்னவென்றால் இதுவும் காண்டாமிருகத்தை போலவே மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் இந்த வண்டு தன்னுடைய எடையை காட்டிலும் 850 மடங்கு அதிக எடையை தூக்கி சுமக்கும் திறன் படைத்தது ஆகும். அதாவது சாதாரண மனிதன் ஒருவன் 65 டன் எடையை சுமப்பதற்கு இது சமமாக இருக்கும்.

gandamiruga-vandu