கஜா புயல் பாதித்த மீனவ குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த பள்ளி மாணவர்கள்..!
  • 19:36PM Feb 09,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 19:36PM Feb 09,2019 Tamil Nadu

your image

 

கடந்த வருடம் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

மீனவர்கள் படகு,வீடுகளையும் இழந்து தவித்து வந்தனர். இதையடுத்து பலரும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடை, உணவுகளை வழங்கினர். இந்நிலையில், சேலத்தில் உள்ள எமரால்ட் வேலி பப்ளிக் பள்ளி நிர்வாகம், பெற்றோர்- கழக ஆசிரியர் கழகத்தினர் அடங்கிய குழுவினர் புயலால் பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் அருகேயுள்ள மீனவ கிராமங்களான கீழத்தோட்டம் மேட்டுத் தெருவை சேர்ந்த 26 குடும்பங்களையும், நாடியம்மாள்புரத்தில் 29 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து ரூ16 லட்சம் நிதி திரட்டினர். பள்ளி நிர்வாகம் 5 லட்சம் ரூபாய் என 21 லட்சம் ரூபாயை கொண்டு 55 வீடுகளை கட்டிக் கொடுத்தனர். அத்துடன் குடிநீருக்காக இரண்டு கிணறுகளை வெட்டிக் கொடுத்தனர். இதில் மாணவர்கள், பெற்றோர்களும், கிராம மக்களும் பணியாற்றினர். கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் பள்ளி தாளாளர் மீனா, மாணவர்கள், பெற்றோர் இணைந்து வழங்கினர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top