நீயா, நானா-வும் பெண் தரப்பு கண்டிஷன்களும்…
 • 13:28PM Sep 18,2017 Chennai, Tamil Nadu 600003, India
 • Written By KV
 • Written By KV
 • 13:28PM Sep 18,2017 Chennai, Tamil Nadu 600003, India

தற்செயலாக நேற்று நீயா நானா பார்க்க நேர்ந்தது.  அதில் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்கும் தகுதியடிப்படையிலான கண்டிஷன்கள் பார்க்க நிரம்ப வேடிக்கையாகவும், சற்றே சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது.  சிந்தனை என்னவென்றால், உண்மையாகவே என்ன கேக்குறோம்னு புரிஞ்சுதான் கேக்குறாங்களா என்பதுதான்.  சீரியஸான மெசேஜ் எல்லாம் எதிர்பார்க்க வேண்டாம். ஆனாலும், முதலில் அவர்களின் கோரிக்கைகள்.

 1. வேலைக்குப் போனாலும் சம்பளத்தை என் வீட்டில்தான் தருவேன்,
 2. மாப்பிள்ளை அமெரிக்காவில் வேலை, க்ரீன் கார்டு பெற்றவராக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அமெரிக்கா சென்றாவது வந்திருக்க வேண்டும்.
 3. சம்பளம் ஒன்றரை லட்ச ரூபாய் வேண்டும்.  சொந்தமாக வீடு வைத்திருக்க வேண்டும், கடன் இருக்கக் கூடாது.
 4. கவர்மெண்ட் வேலை வேண்டும். சொந்தமாக வீடு இருக்க வேண்டும். கடன் இருக்கக் கூடாது.
 5. கலராக, சொட்டை விழுந்திருக்கக் கூடாது, வயது அதிகமாயிருக்கக் கூடாது.
 6. அம்மாவிற்கும் நகை செய்து போடுவதுடன், கையில் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் வேண்டும்.
 7. 60,000 சம்பாதிப்பவனாக இருந்தாலும் பிபிஓ வேலை - கீழேதான். நான் 15,000 சம்பாதித்தாலும் மேனேஜர். சரியான தகுதி இல்லை.

இவர்களுடைய வேண்டுகோள்களை விட அதை நியாயப்படுத்த முயற்சி செய்த பெற்றோரைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது.

சரி. நான் 3 லட்சம் சம்பளம் வாங்குபவனாக இருக்கிறேன். தினமும் சரக்கடித்து, கஞ்சா கசக்கிவிட்டு, முதலில் திருமணம் செய்த பெண்ணிடம் மிரட்டி வீட்டையும், நகையையும் பிடுங்கிக் கொண்டவன்.  திருமணம் செய்து வைத்து விடுவீர்களா??? கொடுமை என்னவென்றால், அன்பு அக்கறை எல்லாம் விடுங்கள் – எந்தப் பெண்ணோ பெற்றோரோ டீ-டோட்டலர் (கெட்ட பழக்கம் இல்லாதவர்) என்ற வார்த்தையை மறந்து போய்கூட சொல்லவில்லை என்பதுதான். அதற்கே இந்த கதியென்றால், அன்பு, பாசம் எல்லாம்?!? சரி, அடுத்த காமெடி கவர்மெண்ட் வேலை. அது கார்ப்பரேட் சிஸ்டமுக்கு மாறிடுச்சுன்னு கூடத் தெரியலை… தாயி, இப்பல்லாம் கவர்மென்ட்ல வேலை ஒண்டிதான்… பென்ஷன் கிடையாது, போராடும் உரிமை கிடையாது, வருஷ இன்க்ரீமென்ட் எல்லாம் புதுசா சேர்றவங்களுக்கு கிடையாது. இருக்கிறவனுக்கு வயசுப் பிரச்சனை, கல்யாணம் வேற ஆகியிருக்கும்.

அப்புறம் இந்த வீடு மேட்டர்… 24 / 26 வயசுல வேலைக்குச் சேர்ந்ததுமே வீடு வாங்க முடியாது. கைல குறைஞ்சபட்சம் 5 - 6 லட்சம் வேணும். அதுக்கு ஒரு 2 வருஷம், அப்புறம் லோன் 25 வருஷம். இதைக் கட்டி முடிக்கவே அவனுக்கு 50 வயசாய்டுமே, அப்போ வயசு வழுக்கைன்னு வேண்டாம்னு சொல்லிடுவீங்க, அதானே. அப்புறம் சம்பளத்தை அப்படியே வீட்டுக்கு குடுத்துடுவீங்க… (இத அவங்க வீட்லயே நம்புவாங்களான்னு தெரியலை!!!) அப்போ இந்த அக்காமடேஷன், புட், பிரசவ செலவு, பிள்ளைங்கள படிக்க வைக்கிறதெல்லாம்?!? உங்கப்பா அம்மா உங்களை மட்டும்தானே படிக்க வச்சு கட்டிக் குடுத்தாங்க. அப்படின்னா இரண்டு பசங்க இருந்தா, ஒண்ண மறுபடியும் உங்கப்பாம்மா வீட்டுக்குப் படிக்க வைக்க அனுப்பிடலாமா??? எல்லாம் சரி, உங்களுக்கு சொந்த வீடு இருக்கான்னு கேட்டா எத்தனை பொண்ணுகளுக்கு கல்யாணம் ஆகும்???

அமெரிக்க மாப்பிள்ளை வேணும்னு கேக்கத் தெரியற உங்களுக்கு, அங்க போய் அவங்கவங்க வேலையை அவங்கவங்கதான் செய்யனும்னு தெரியுமா??? டெய்லி ரொட்டியைப் பால்ல தொட்டு சாப்பிடலாம்னு ஏதும் ப்ளானா??? டீ கூட போடத் தெரியாம, சொந்தமா முடியெல்லாம் வெட்டிக்குற அமெரிக்கா ஆசையெல்லாம் – நோ கமெண்ட்ஸ்… டைவர்ஸ் ரேசியோ அதிகமா இருக்கிற கண்ட்ரி அதுதான். (இங்க முடிவெட்டுறவன ஜாதி பேர சொல்லி திட்டின பல பேரு, அங்க அவனுக்கு அவனேதான் வெட்டிகிட்டு இருக்கான் – ஜாதியை விட 1500 ரூவா பெருசில்ல…)

ஒருத்தர் கூட அன்பு பண்பு, பாசம் இதெல்லாம் பத்திப் பேசல. அங்க உங்களுக்கு வக்காலத்து வாங்கிட்டிருந்த அப்பாவையும், அம்மாவையும் பார்க்கிறப்போ அதுதான் பாவமா இருந்துச்சு…

இவங்க பேசுறது எல்லாம் பார்த்தா, பசங்ககிட்ட ஒண்ணே ஒண்ணுதான் சொல்லத் தோணுது. பேசாம காலேஜ் முடிக்கிறதுக்குள்ள லவ் பண்ணி கூட்டிட்டு ஓடிருங்க… இல்லாட்டி சந்தேகம்தான்…

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top