Lushgreen

உயிர் காப்பான் தோழன் என்று சும்மாவா சொல்லுவாங்க? நட்புக்காக எதையும் செய்யும் இந்த மனிதரை என்னவென்று சொல்வது?

May 04 2021 06:03:00 PM

இரத்த சம்மந்தமே இல்லாமல் வரும் அற்புதமான உறவு நட்பு தான். நட்புக்கு ஜாதி, மதம், இனம், மொழி என்ற பேதமே கிடையாது. பல ஆண்டுகள் ஆனாலும் என்றும் மாறாமல் இருக்கும் உன்னதமான உணர்வு தான் நட்பு. நட்புக்காக எதையும் செய்ய துணிந்த பலரை பார்த்திருப்போம். ஆனால் இந்த இக்கட்டான காலகட்டத்திலும் நட்புக்காக இவ்வளவு துணிச்சலான காரியத்தை செய்துள்ள இவருக்கு நிச்சயம் ஒரு கோவிலே கட்டலாம்.

friendship-power

ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் தேவேந்திரா. உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஐ.டி துறையில் பணியாற்றி வருபவர் ரஞ்ஜன் அகர்வால். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாவர். இதனிடையே ரஞ்சன் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு ஆக்சிஜன் இன்றி அவர் சிரமப்பட்டு வருவதாக ரஞ்சனின் பெற்றோர் மூலம் தகவலை தெரிந்து கொண்டார் தேவேந்திரா.

friendship-power

தனது நண்பனை காப்பாற்றுவதற்காக களத்தில் இறங்கிய தேவேந்திரா ஆக்சிஜன் சிலிண்டர் எப்படியாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தீவிரமாக போராடி கடைசியில் 10000 ரூபாய் கொடுத்து ஒரு ஆக்சிஜன் சிலிண்டரை வாங்கியுள்ளார். இதுமட்டும்லாது இந்த ஆக்சிஜன் சிலிண்டரை தனது காரில் வைத்து நொய்டா வரை 1400 கிலோமீட்டர் பயணம் செய்து தக்க சமயத்தில் வந்து ஆக்சிஜன் சிலிண்டரை கொடுத்து உதவியுள்ளார். மேலும் தனது நண்பன் குணமாகும் வரை பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ள தேவேந்திராவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.