Misc

யாருக்கும் சொந்தம் இல்லாத நிலத்தை, நமக்கு சொந்தமாக்குவது எப்படி? சட்டத்தில் இப்படியெல்லாம் கூட வழி இருக்கு! அரசியல்வாதிகளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்!

Sep 23 2021 01:24:00 PM

யாருக்கும் சொந்தமில்லாத நிலங்கள் என எதுவும் இல்லை. அவை அரசுக்கு சொந்தமானதாக இருக்கும். அதை அரசிடம் குத்தகைக்கு அல்லது இனாமாக அனுபவிக்க பட்டா பெறவேண்டும். பொதுவாக குறிப்பிட்ட ஆண்டு வரை தரிசு அல்லது புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தால், பட்டா வேண்டி வட்டாசியரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். அவர் தகுதி இருப்பின் பட்டா வழங்குவார். சில பேர் தகுதி இல்லை என்றாலும் பணம் கொடுத்து பட்டா பெறுவதும் உண்டு. புறம்போக்கு நிலம் என்றால், பட்டாதாரர் பெயர் உள்ள இடம் காலியாக இருக்கும்.

land patta chitta

அந்த நிலங்களில் அரசு பார்த்து என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அரசு தனக்குச் சொந்தமான நிலங்களை பொதுமக்களுக்கு இனாமாகவோ, விலைக்கோ கொடுக்க முடியும். அதற்கு சட்டத்தில் வழி உள்ளது. எங்க ஊரிலேயே காலி புறம்போக்கு நிலம் நிறைய இருக்கு. எங்க வீட்டை ஒட்டி காலணியில் வசித்துவந்த மக்கள், புறம்போக்கு நிலத்தின் ஒரு பகுதியை தங்களுக்கு வேண்டி விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தற்போது பட்டா வழங்கப்பட்டுவிட்டது.

land patta chitta

சொந்த வீடு இல்லாத மக்கள், ஒருங்கிணைந்து புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு கிரயம் செய்து தரும் படி கேட்க உரிமை உள்ளது. யாருக்கு வழங்கலாம்? எந்த விலையில் வழங்கலாம்? என்பது குறித்து முடிவு செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதன் படி மாவட்ட ஆட்சியரோ, மாவட்ட வருவாய் அலுவலரோ இதைச் செய்ய முடியும். இவ்வாறு கொடுக்கப்படும் நிலம், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கொடுக்கப்படுகிறது. 10 முதல் 30 ஆண்டுகள் வரைக்கும் விற்க முடியாது. வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட இடமாக இருந்தால் கடை வைக்க கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும்.

land patta chitta

வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெற உருவாக்கப்பட்ட இந்த திட்டம், மோசடி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. உண்மை நிலவரம் என்ன என்றால், அரசியலில் செல்வாக்கு உள்ளவர்கள், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு அரசு கணக்கில் உதவி செய்ய பயன்படுத்தும் சட்டரீதியான வழி இதுவாகும். உண்மையான ஏழைகள் இரண்டு, மூன்று பேருக்கு இடத்தை கொடுத்துவிட்டு, மீதி தனக்கு வேண்டியவர்களுக்கு வழங்கிவிடுகின்றனர். சில நேரங்களில் மோசடி செய்து புறம்போக்கு நிலம், தனி நபருக்குக் கூட சொந்தமமாகக் கூடும். என்னவெல்லாம் நடக்குது பாருங்க.