#PRAGGNANANDHA: WORLD YOUTH CHESS CHAMPIONSHIP-ல் அசத்திய சென்னைச் சிறுவன்!!! விபரங்கள் உள்ளே!!!
  • 17:05PM Oct 13,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:05PM Oct 13,2019 Chennai

WORLD YOUTH CHESS CHAMPIONSHIP போட்டிகள் MUMBAI-யில் நடந்து வந்தது. இதில் நேற்று முன்தினம், 11/10/2019 அன்று நடந்த ஆட்டத்தில், 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் GRAND MASTER ஆன சென்னையை சேர்ந்த RAMESHBABU PRAGGNANANDHA, LIDHUANIA-வின் வீரரை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய PRAGGNANANDHA 63-வது MOVE-ல் வெற்றி பெற்றார்.  இதனால் மொத்தம் 8.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை நெருங்கினார். அடுத்த இடத்தில், 8 புள்ளிகளுடன் ARMENIA வீரர் இருந்துள்ளார்.  இதனிடையே, நேற்று 11-வது மற்றும் கடைசிச் சுற்று ஆட்டம் நடந்தது.

இதில் வெற்றி பெற்ற 14 வயதான RAMESHBABU PRAGGANANDHA வெற்றி பெற்றுத் தங்க பதக்கத்தைத் தட்டி சென்றார்.  இவருடைய RATING சாதாரணமானதல்ல. கிட்டத்தட்ட 2,569 பெற்று உள்ளார்.  18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் அவர் பெற்றுள்ள முதல் தங்க பதக்கம் இதுதானாம். போட்டிகளைப் பதக்க வெற்றியுடன் முடித்தவர்கள் என்று பார்த்தால், இந்தியத் தரப்பில் மொத்தம் 6 பதக்கங்கள் வென்றிருக்கிறார்கள்.  அவற்றில் 3 வெள்ளி பதக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

10 AUGUST 2005-ல் பிறந்த PRAGGANANDHA, உலகளவில் மிக இளவயதில், CHESS-ல் GRANDMASTER பட்டம் பெற்ற நான்காவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர், SERJEY KARJAKIN, GUHESH D மற்றும் JAVOKHIR SINDAROV ஆகிய மூவர்தான் இதுவரையிலும் CHESS-ல் GRANDMASTER பட்டம் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெருமைப்படக் கூடிய விஷயம் என்னவென்றால், இரண்டாவது இளவயது GRANDMASTER பட்டம் வென்ற GUHESH D மற்றும், நான்காவதாகத் தற்போது பட்டம் வென்ற இருவரும் CHENNAI-யில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதுதான். சரி, இவர் GRAND MASTER ஆன போது இவரது வயது என்ன தெரியுமா??? வெறும் 12 வயது 10 மாதங்கள்தானாம். கலக்குங்க, கலக்குங்க!!!

Guhesh Grand Master  |  Jennitha World Para Chess Champion  |  National Chess Champion Senthamizh  |  Actor Vijay Siblings  |  Inida's First Book Store |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top