Misc

காட்டுத்தீ எப்படி உருவாகிறது? இந்த பிரச்சனைகள் இயற்கையாகவே உருவாகிறதா? இல்லை சிலர் வேண்டுமென்றே ஏற்படுத்துகிறார்களா?

Jul 29 2021 03:23:00 PM

நண்பர் ஒருவர் இயற்கை ஆர்வலராகவும், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரியாகவும் இருக்கிறார். அவரிடம் ஒருமுறை இந்த காட்டுத்தீ எப்படி உருவாகிறது என்று கேட்டேன். இயற்கையாக காட்டுத்தீ உருவாக வாய்ப்புகள் ரொம்ப குறைவு தானாம். மூங்கில் ஒன்றுடன் ஒன்று உரசி, அதிக வெப்பம் காரணமாக இடி, மின்னல் ஏற்படும்போது காட்டுத்தீ உருவாகுவது தான் காட்டுத்தீ. இந்த மாதிரி சம்பவங்கள் காடுகளில் நிகழ்வது ரொம்ப குறைவு தான்.

forest people trees

இயற்கை ஆர்வலர்கள் என்ற பேரில் காடுகளுக்குள் சிலர் புகுந்து கொண்டு அங்கே ம*து அ*ருந்துவது, பு*கை பிடித்து கண்ட இடங்களில் தூக்கியெறிவது, மூட நம்பிக்கை கொண்ட சிலர் காடுகளுக்குள் சென்று நெருப்பு வைப்பது, மரங்களை க*டத்தும் நபர்கள், தி*ருட்டு தொழில் செய்யும் நபர்கள், மலைவாழ் மக்கள், வே*ட்டையாடும் நபர்கள் இவர்களால் தான் காட்டுத்தீ 100 சதவீதம் உருவாகிறது.

forest people trees

மத்திய அரசு காடுகளில் இந்த மாதிரியான அ*சம்பா*விதங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என்று பல கோடி ரூபாய் பணத்தை ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் இன்றுவரை இதுகுறித்த எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று அது சம்மந்தமான துறைகளில் பேசிக்கொள்கிறார்கள். மலைவாழ் மக்களுக்கு எந்த விதமான உதவிகளும் அரசு செய்வதற்கு த*யங்குவதால் அவர்களும் சில நேரங்களில் காட்டுத்தீயை ஏற்படுத்துகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

forest people trees

காடுகள் தான் இந்த நாட்டின் முக்கிய வளங்கள். இவற்றை அ*ழித்து விட்டால் மனிதர்கள் வாழ்வது ரொம்ப க*ஷ்டம். மழை பொழிவதற்கு கூட இந்த காடுகள் தான் காரணம். காடுகளில் உள்ள மரங்களை அ*ழித்து விட்டால் புதிதாக முளைக்கும் செடி, கொடிகள் ஆடு, மாடுகள் மேய்வதற்கு உதவும் என்று சிலர் த*வறான தகவல்களை பரப்புகிறார்கள். மொத்தத்தில் காடுகளை நம் சொந்த வீட்டைப் போல பராமரித்தால் எந்த விதமான காட்டுத்தீ யும் ஏற்படாது என்பது தான் உண்மை.

forest people trees