சோன் டூங் குகை – குகைக்குள் காடு!!!
  • 07:23AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 07:23AM Sep 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

என்னடா இது! காட்டுக்குள்ள குகைங்கிறத தப்பா தட்டச்சு செஞ்சிட்டேன்னு யாரும் நினைக்க வேண்டாம். நிஜமாகவே இது குகைக்குள்ள இருக்கிற காடுதான்… 1991-ம் வருஷம் வியட்நாம்ல, போங் நா க பாங் தேசிய பூங்காவில் (உண்மையில் காடு!!!) போயிட்டிருந்த ஹோ கன்ஹ்-ங்கிறவரு தற்செயலா கண்டுபிடிச்சதுதான் இந்தக் குகை. அப்போ அவருக்குத் தெரியாத ஒரு விஷயம் என்னன்னா, அதுவரைக்கும் கண்டுபிடிக்கப்பட்ட குகைகள்லயே பெரிய குகை, அதுவும் ஐந்து மடங்கு பெரிய குகைங்கிறதுதான்.  அதுக்கப்புறமும் அந்த குகைக்குள்ள இருந்து வந்த விநோதமான சப்தங்களும், அசாதாரணமான தட்பவெட்பமும், ரொம்பவே முக்கியமா அதோட ஆழத்தையும் பார்த்து பயந்து போய், அங்கிருக்கிறவங்க யாருமே அதுல என்ன இருக்குன்னு கூடப் பார்க்கலை.

2009-ல பிரிட்டீஷ் குகை ஆராய்ச்சியாளர்கள், இதுக்குள்ள என்னதான் இருக்குன்னு பார்க்க 260 அடி ஆழமுள்ள அந்தக் குகைல இறங்கிப் பார்த்தப்பத்தான் இயற்கையோட அதிசயத்தைப் பார்த்திருக்காங்க… ஒரு காட்டுக்குள்ள பொதுவா என்னவெல்லாம் இருக்கும்??? அருவி, பெரிய மரங்கள், விலங்குகள், பெரிய பாறைகள், நதி… இது எல்லாமே இருந்தது. அது கூட அப்போவே அவங்களுக்கு தெரியல. இறங்கிப் பார்த்து பெரிய சுவர் மாதிரி, சேற்றுடன் Calcite இருக்கிறதைப் பார்த்ததும், அந்தச் சுவருக்கு வியட்நாம் பெருஞ்சுவர்னு பேரு வச்சிட்டு கிளம்பிட்டாங்க…

கிட்டத்தட்ட ஒரு வருஷம் போராடினதுக்குப் பிறகு, 2010-ல உள்ள போனவங்கதான் நான் மேல சொன்ன அத்தனை அதிசயத்தையும் முதல்ல பார்த்தவங்க… 650 அடி அகலம், 656 அடி உயரம்னு கிட்டத்தட்ட 5 கி.மீ.க்கும் மேல உள்ள ஒரு பெரிய காடு இருக்கும்னு அவங்க எதிர்பார்க்கவே இல்லை… அதோட உயரம் இன்னைக்கு இருக்கிற ஒரு பெரிய 60 மாடிக் கட்டிடத்தைக் கூட உள்ள வைக்கற அளவுக்கு பெரிசு… அங்காங்கே கசிஞ்ச வெளிச்சத்தால, உள்ள இருக்கிற மரங்கள் எல்லாம் நூறடிக்கு மேல சர்வ சாதாரணமா வளர்ந்திருந்ததைப் பார்த்து உண்மையாகவே எல்லாரும் பிரமிச்சுத்தான் போய்ட்டாங்க…

வியட்நாம் அரசு கிட்ட ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிட்டுத்தான் அந்தக் குகைக்கு போய் வர முடியும்.  இத்தனை வருஷம் கழிச்சும், இதுவரைக்கும் ஒரு சீசனுக்கே மொத்தம் 800 பெர்மிட்தான் குடுக்கிறாங்களாம்… ம்ஹூம்... இதெல்லாம் நாம என்னைக்குப் போய் பார்க்க???

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top