#neymar : ஒரு பெண்ணிடம் அடிவாங்கும் கால்பந்து வீரர் நெய்மர் வைரல் வீடியோ
  • 16:49PM Jun 07,2019 Paris
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 16:49PM Jun 07,2019 Paris

பிரேசில் நாட்டின் சிறந்த கால்பந்து வீரரான நெய்மர்,இவர் மீது  மாடலாக பணியாற்றி வரும் நாஜிலா ட்ரிண்டேட் என்ற இருபத்தாறு வயது பெண் ஒருவர் நெய்மர் தன்னை  பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் கூறியுள்ளார். இந்த புகாரை ஸோ பாலோவில் உள்ள  காவல் நிலையத்தில் கடந்த வாரம் அளித்துள்ளார்.இது பற்றிய விபரம் பின் வருமாறு

neymar.jpg

நெய்மருக்கும் நாஜிலாவிற்கும்   இன்ஸ்டாக்ராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில்  நாஜிலாவிற்கு நெய்மர் மீது ஆசை இருந்துள்ளது. எனவே  நாஜிலா, நெய்மர் உடன் உல்லாசமாக இருக்க நினைத்துள்ளார். அதற்க்காக  கடந்த மே மாதம் 15-ஆம் தேதி  இருவரும் பாரிஸ் சென்றுள்ளார். இருவரும் பாரிஸில் உள்ள  ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கி இருந்துள்ளனர்.

நாஜிலாவும் நெய்மரும் உல்லாசமாக இருந்த போது நெய்மர் தீடீரென அந்த பெண்ணை மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் ஏற்பட்ட வலியை  பொறுத்துக்கொள்ள முடியாத நாஜிலா தன்னை விட்டு விடும் படி கதறி உள்ளார். எதனையும் காதில் வாங்காத நெய்மார் மீண்டும் மீண்டும் நாஜிலாவை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளானர் நாஜிலா.

neymar2.jpg

அடுத்த நாள் நாஜிலா, நெய்மரை மீண்டும் ஹோட்டல் ரூமில் சந்தித்துள்ளார்.தன்னை தாக்கிய நெய்மரை   கட்டில் மீது தள்ளி  தாக்கியுள்ளார்.நெய்மரை பழிவாங்க அதனை வீடியோ எடுத்து நாஜிலா  சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்  அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி கொண்டிருக்கிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top