Highrise

வெட்கப்படாமல் இப்படி மட்டும் செய்து பாருங்கள், அனைவரின் கண்களும் அங்கு தான் செல்லும்

Apr 02 2021 07:56:00 PM

நமது பாதங்கள் மிகவும் மென்மையானது ஆகும். அதை சரியாக கவனித்துக்கொள்ள வேண்டும். பாதங்களை வினிகர் கலந்த நீரில் சிறிது நேரம் ஊற வைப்பது என்ன மாதிரியான பலன்களை தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

foot-maintenance foot-management

நீச்சல் குளத்தில் நீந்துபவர்களுக்கு எக்ஸிமா என்ற அலர்ஜி உண்டாகும். அதாவது உள்ளங்கால்கள் மற்றும் விரல்களுக்கு இடையே ஒரு வித எரிச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படும். வினிகர் இந்த அலர்ஜிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே வினிகர் கலந்த நீரில் பாதத்தை நனைத்து வைத்தால் இந்த பிரச்சனை சரியாகி விடும். அலுவலகங்களுக்கு செல்லும் பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். ஷூக்கள் அல்லது சாக்ஸ் கழற்றும் போது பயங்கரமான துர்நாற்றம் வீசும். இதற்கு காரணம் பாதங்களில் ஏற்படும் வியர்வை. இந்த பிரச்சனைக்கும் வினிகரை பயன்படுத்துவதினால் நல்ல தீர்வை காண முடியும்.

foot-maintenance foot-management

பாதங்களை உலராமல் பார்த்துக்கொள்வது முக்கியமாகும். வறட்சி பாதங்களில் வெடிப்பு உண்டாக்கி வலியை ஏற்படுத்தும். வினிகர் தண்ணீர் கலவையில் காலை ஊறவைப்பதினால் இந்த வலி சரியாவதோடு வெடிப்புகளும் விரைவில் நீங்கும். ஒரு பெரிய வாளியை எடுத்துக்கொண்டு அதில் 1 : 2 என்ற விகிதத்தில் வினிகர் மற்றும் வெந்நீர் கொண்டு நிரப்புங்கள். பிறகு அதில் பாதங்களை வைத்து 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கலாம். தினமும் இதை செய்வதினால் பாதங்கள் மென்மையாக இருப்பதுடன் மேற்கூறிய பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வை தரும்.