#Summer Special : தம்பி Rose Milk குடிக்கலாமா? உங்கள் கைகளே செய்யும் மாயாஜால வித்தை - எப்படின்னு பாக்கலாம்!
  • 17:58PM Apr 19,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 17:58PM Apr 19,2019 Tamil Nadu

மெர்சல் படத்துல சமந்தா விஜய்ய பாத்து 'தம்பி ரோஸ் மில்க் குடிக்கலாமானு கேக்கறதுக்கு முன்னாடியே, நம்ம ஊருல ரோஸ் மில்க் பேமஸா தான் இருந்துச்சு. சில கடைல பிரெஸ் ஜூஸ் போட மாட்டாங்க. ஆனா அங்க கூட ரோஸ் மில்க் இருக்கும். செய்ய ஈஸியாவும், குடிக்க டேஸ்ட்டாவும் இருக்கறதால தமிழ்நாட்டுல எங்க போனாலும் ரோஸ் மில்க் வாங்கி குடிக்க முடியும். பாதம் பால் கூட இடத்துக்கு இடம் டேஸ்ட் மாறும். ரோஸ் மில்க் எங்க போனாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். சில இடத்துல லாபத்துக்கு ஆசப்பட்டு சக்கரை போடறதுக்கு பதிலா சாக்கரின் போட்ருவாங்க. சில இடத்துல தண்ணி அதிகமா ஊத்தி சல சலனு பண்ணிருவாங்க. மத்த படி அந்த rose milk பிளேவர் டேஸ்ட் ஓரளவுக்காவது எல்லா இடத்துலயும் இருக்கும். கடைல என்ன தான் காசு கொடுத்து குடிச்சாலும், வீட்டுல நாமலே செஞ்சு ப்ரிட்ஜ்ல வெச்சு குடிச்சா அது தனி டேஸ்ட் தான். வழக்கமா பால் காய வெச்சு, அதுல ரோஸ் எசன்ஸ், சர்க்கரை போட்டு கலக்கி வைக்கிற முறை தான் கேள்விப்பட்டு இருப்போம். இப்போ ரோஸ் மில்க் சிரப் செஞ்சு எப்படி rose milk செய்யலாம்னு பாக்கலாம்.

1. முதல்ல ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊத்தி சர்க்கரைக் கலந்து நல்லா கொதிக்கவிடனும். குறஞ்சது  4 நிமிடமாவது கொதிக்கனும்.

2. இறக்குவதற்கு முன்னாடி பிங்க் ஃபுட் கலர் சேர்க்கணும். இது எல்லா கடையிலும் கிடைக்கும். உடனே கொதிக்கிறது திக்கா மாறும் அப்போ அடுப்ப அணைச்சிரனும்.

3. கடசியா தீய அணைத்த அப்புறம் ரோஸ் எசன்ஸ் கலந்து நல்லா கலக்கி விடனும். அவ்வளவுதான் ரோஸ் மில்க் சிரப் தயார் ஆகிருச்சு.

4. இத இறுக்கமா ஒரு டப்பால அடச்சு ஃபிரிஜ்ஜில வச்சுட்டா போதும்.  நமக்கு ரோஸ் மில்க் வேணுங்கற அப்போ பாலை கொதிக்க வெச்சு, அப்புறம் குளிர்ச்சியானதும் 3 ஸ்பூன் ரோஸ் மில்க் சிரப் சேர்த்துக் கலக்கினால் ரோஸ் மில்க் ரெடி ஆகிறும்.

#summer special : கடையில வாங்குற ரோஸ் மில்க் நாம எதிர் பார்க்கிற டேஸ்ட் வராது. அப்படியே வந்தாலும் திரும்ப திரும்ப வீட்டுல குடிக்கிற மாதிரி ஒரு அனுபவம் கிடைக்காது. வீட்டுலையே இது மாதிரி செஞ்சு பழகிட்டா, நம்ம மனசுக்கு புடிச்ச அப்ப எல்லாம் rose milk செஞ்சு குடிக்கலாம்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top