#NEETREGULATIONS: NEET தேர்ல எழுதப் போகிறீர்களா??? இதைப் படிச்சுட்டு, அதற்கேற்றாற் போல செல்லுங்க!!!
  • 17:52PM May 04,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 17:52PM May 04,2019 Chennai

NATIONAL TESTING AGENCY எனப்படும் NTA, நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS மற்றும் BDS போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான NEET எனப்படும் ENTRANCE EXAM-ஐ நடத்தி வருகிறது. நாளை NEET EXAM நடைபெற உள்ள நிலையில் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு NTA சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

#1. NEET WEBSITE- ல் உள்ள நேரமே அனைத்து EXAM CENTRE-களிலும் பின்பற்றப்படும்.

#2. பிற்பகல் ‌1.30 மணிக்கு முன்னதாக மாணவர்கள் EXAM CENTRE-ல் இருக்க வேண்டும். 

#3. பிற்பகல் ‌1.30 மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

#4. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கும்.

#5. தேர்வு மையத்திற்குள் துண்டுத் தாள்கள், PENCIL BOX-கள், PURSE, PEN, SCALE, WRITING BOARD, RUBBER, LOG BOOK, SCANNER போன்றவற்றை எடுத்து வரக் கூடாது.

#6. CALCULATOR, PENDRIVE, MOBILE, BLUETOOTH, EAR-PHONE, MICROPHONE, PAGER, HEALTH BAND உள்ளிட்டவையும் தடை செய்யப்பட்டுள்ளன.

#7. WRIST WATCH, BRACELET, WALLET, MIRROR, BELT, HAT போன்றவற்றைத் தேர்வு எழுதும் அறைக்குள் அணிந்து வரக்கூடாது.

#8. மோதிரம், தோடு, மூக்குத்தி, CHAIN, BADGE உள்ளிட்டவையும் EXAM CENTRE-குள் தடை செய்யப்பட்டுள்ளன.

#9. உணவு பொருட்கள், தண்ணீர் பாட்டில் போன்றவற்றிற்கும் EXAM CENTRE-குள் அனுமதி இல்லை.

#10. HALF HAND கொண்ட லேசான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். ஆடைகளில் பெரிய BUTTON-களோ, BADGE-களோ இருக்கக் கூடாது.

#11. RELIGION AND BELIEF/CULTURE சார்ந்த ஆடைகளை அணியும் மாணவர்கள் பகல் 12.30 மணிக்கே EXAM CENTRE-னுள் இருக்க வேண்டும்.

#12. HEELS அல்லாத செருப்புகளையே அணிய வேண்டும். SHOE-க்கள் அனுமதிக்கப்படாது.

#13. AADHAR போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.

#NEETREGULATIONS என்னவெல்லாம் என்ற தெரிந்து கொண்டீர்கள்தானே. அதற்கேற்றவாறு சென்று, தேவையற்ற மனஉளைச்சலைத் தவிர்த்து, வெற்றிகரமாகத் தேர்வினை எதிர்கொண்டு வெற்றி பெற, MAYBEMAYNOT.COM சார்பாக வாழ்த்துகள்!!!

Neet Classes in Private Schools  |  Supreme Court Versus Neet  |  Neet and CBSE  |  Neet Equality Injustice  |  Government Neet Training Camp Failure  |

Top