Timeless

என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க? இது இல்லாம எப்படிங்க இருக்க முடியும்? கொஞ்சம் யோசிச்சு சட்டம் இயற்றக்கூடாதா?

Sep 20 2021 06:38:00 PM

உலகத்துல இருக்குற ஒவ்வொரு நாட்டுலயும் அவுங்களுக்கு தகுந்தமாதிரி பல விசித்திரமான சட்டதிட்டங்களை வகுத்து வைத்துள்ளனர். அதிலும் ஸ்பெயின் நாட்டுல இருக்குற சட்டம் ரொம்பவே வித்தியாசமானது. எல்லா நாட்டுலயும் குடி போதையில் வாகனம் ஓட்டக்கூடாது என்று தான் சட்டம் போடுவாங்க. ஆனா இவிங்க கொஞ்சம் மாத்தி யோசிச்சிருக்காங்க போல.

flip-flops spain-car-drivers

சஸ்பென்ஸ் வைக்காம மேட்டர் என்னன்னு சொல்லி விடுகிறேன். ஸ்பெயின் நாட்டை பொறுத்தவரை நீங்க செருப்பு அணிந்துகொண்டு வாகனத்தை இயக்கக்கூடாது. இந்த சட்டத்தை போட்டதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. செருப்பு அணிவதால் என்ன சிரமம் ஏற்படப்போகுது என்று நீங்க நினைக்கலாம். அதனால் ஓட்டுனருக்கு கவனக்குறைவு ஏற்படலாம், விபத்து நடக்கலாம் இப்படியெல்லாம் கூறுகின்றனர்.

flip-flops spain-car-drivers

செருப்பு பல விதத்தில் ஓட்டுனருக்கு இடைஞ்சல் தருவதாக ஸ்பெயின் நாட்டு அரசாங்கம் கருதுகிறது. செருப்பு ஈரமாக இருந்தால் அதனால் நிறைய பாதிப்புகள் வரலாம். மத்தபடி என்ன பெரிய பாதிப்பு வருமோ நமக்கு தெரியல. ஓட்டுனருக்கும் வாகனத்துக்கும் நடுவுல எந்த பொருளும் இடையூறாக இருக்கக்கூடாது என்பது இவர்களின் எண்ணம்.

flip-flops spain-car-drivers

தப்பித்தவறி செருப்பு அணிந்துகொண்டு வாகனத்தை இயக்கினால் என்ன பண்ணுவாங்க என்று நீங்க புத்திசாலித்தனமா ஒரு கேள்வியை கேட்பீங்க என்று எனக்கு தெரியும். காவல்துறை கிட்ட மாட்டாதவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. மாட்டிக்கிட்டா அபராதம் கட்ட வேண்டியிருக்கும் அவ்வளவுதான். எனவே ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா செல்வதாக இருந்தால் இந்த செருப்பு விஷயத்தை மறந்துடாதீங்க.

flip-flops spain-car-drivers

என்னுடைய நண்பன் இந்த அனுபவத்தை என்னிடம் ஒருமுறை கூறினான். அவன் ஒருமுறை ஸ்பெயினில் கார் பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென போலீஸ் காரை நிறுத்தி சோதனை செய்யும் பொது ஓட்டுநர் செருப்பு அணிந்துள்ளதை பார்த்துவிட்டு அவருக்கு 200 யூரோக்கள் அபராதம் விதித்துவிட்டு சென்றனராம்.