உப்பிட்ட மக்களுக்கு உதவ மறுக்கும் மனம்.
  • 06:19AM Dec 08,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 06:19AM Dec 08,2017 Chennai, Tamil Nadu 600003, India

Kanyakumari : கடந்த வாரம் தாக்கிய ஓகி புயலால் தென் தமிழகம் முழுவதும் பதிப்பிற்குள்ளானது.வரலாறு காணாத அளவிற்கு அங்கு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது.இது குறித்து மீனவர்கள் பல போராட்டங்கள்  நடத்தியும் பெரிதாக உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை.

கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது தமிழகத்தில் உள்ள அணைத்து இடங்களிலும் இருந்து ஆதரவு அளித்தனர்.ஆனால்,இன்று கன்னியாகுமரியின் நிலையைப் பற்றி பலருக்கும் தெரியவில்லை.இவ்வளவு ஏன் அங்குநடப்பதை வெளியே சொல்வதற்கு கூட யாரும் முன்வரவில்லை.

மீனவர்கள் தன்னிச்சையாக போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்,அப்போதும் கேரளாவை சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி மட்டுமே அங்கு நடப்பதைப் பதிவு செய்தனர்.வேறு வழியின்றி குமரியை கேரளாவுடன் இணைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.இந்தச் செய்தியை அறிந்த தமிழக ஊடகங்கள் போராட்டம் நடந்த இடத்திற்கு நேரடியாகச் சென்று செய்திகளைப் பதிவு செய்து வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பானது.

தமிழக மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலில் சிக்கியுள்ளனர்,அவர்களைப் பற்றி எந்தக்கவலையும் இல்லாமல் RK நகர் தேர்தலை பற்றியே அனைவரின் கவனமும் இருக்கிறது.

சென்னை வெள்ளத்தின் போது பிரபலங்கள் பலர் தானாக முன்வந்து உதவினார், ஆனால் இந்த வெள்ளத்திற்கு இது வரை யாரும் உதவ முன்வரவில்லை.கடலுக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் மீனவர்களின்  நிலை சற்று கவலைக்கிடமாகவே இருக்கிறது.சென்னை வெள்ளத்தின் போது கிடைத்த உதவியில் 20 சதவீதம் கூட கிடைக்கவில்லை என்பதே வருத்தமளிக்கும் உண்மை.கன்னியாகுமரி மீனவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு நம்மால் ஆன உதவிகளை எதாவது செய்வோம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top