Lushgreen

உலகின் முதல் தொலைபேசி டைரக்டரி || The First Telephone Book Had Fifty List

Jul 13 2018 09:06:30 AM

your image

 

1878 - உலகின் முதல் தொலைபேசி டைரக்டரி-world first telephone directory, அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாகாணத்தின் நியூ ஹேவன் நகரில் வெளியிடப் பட்டது. இது வெறும் 50 பெயர்களை ஒரே பக்கத்தில் கொண்ட ஓர் அட்டையாக இருந்தது. இங்கிலாந்தின் முதல் டைரக்டரி, 1880இல் வெளியிடப்பட்டது. அக்காலத்தில், தொலைபேசிகளுக்கு எண்கள் கிடையாது.

தொலைபேசி நிலையத்தில் இருக்கும் பணியாளரிடம் யாரை அழைக்க வேண்டும் என்று தெரிவித்தால், அழைத்து இணைப்புக் கொடுப்பார். இதனால், இந்த டைரக்டரியில் லண்டன் நகரிலிருந்த 248 பேரின் பெயர், முகவரி மட்டுமே இருந்தது. இவற்றுக் கெல்லாம் முன்பே, 18ஆம் நூற்றாண்டின் தொடக் கத்தில், அதாவது, தொலைபேசி கண்டுபிடிப்பதற்கும் முன்பே, பல நகரங்களில், அங்குகுடியிருப்போர், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் பெயர் விபரம் அடங்கிய பட்டியல் சிட்டி டைரக்டரி என்ற பெயரில் வெளியிடப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி டைரக்டரியில், விளம்பரங்களுடன் கூடிய மஞ்சள் பக்கங்கள்1886இலேயே அறிமுகமாகிவிட்டது. விளம்பரங்கள் இல்லாத, பயனாளர்களின் பட்டியல் மட்டும் கொண்ட டைரக்டரி வெள்ளைப் பக்கங்கள் என்று அழைக்கப் படுகிறது. 1938இல் ஏ டி அண்ட் டி நிறுவனம், எளிதாகப் படிக்க உதவும் வகையில்,தனது டைரக்டரிக்கென்றே, பெல் காத்திக் என்ற எழுத்துருவை உருவாக்கியது. உலகின் முதல் மின்னணு டைரக்டரியை 1981இல் பிரான்ஸ் உருவாக்கியது.

அச்சிடும்செலவையும், விசாரணை அழைப்புகளுக்கும் உதவும் பணியாளர் செலவையும்மிச்சப்படுத்த, மினி-ட்டெல் என்ற பெயரில், சிறிய கணினியை லட்சக்கணக்கானோருக்கு பிரான்ஸ் இலவசமாகவே வழங்கி, விளம்பர வருவாய்மூலம் ஈடுகட்டியது.

தொலைபேசி டைரக்டரி என்பது வெறும் தொகுப்புத்தான் என்பதால் அதற்குக் காப்புரிமை கோர முடியாது என்று 1991இல் அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

முதல் இணையவழி டைரக்டரியை அமெரிக்கா 1996இல் அறிமுகப்படுத்தியது. டைரக்டரி அச்சிடுவது பயனற்றது என்ற நிலை ஏற்பட்டுவிட்ட சூழலில், வட அமெரிக்காவின் பல நகரங்களில் இதைத் தடை செய்து சட்டமே இயற்றப்பட்டுள்ளது.