Lushgreen

#The First Spam Email Ever Sent : சோம்பேறிகளுக்கு தான் அறிவு ஜாஸ்தியாம் - என்ன பண்ணியிருக்காங்க பாருங்க..!

May 03 2019 07:22:00 PM

1978 ஆண்டில் தான் உலகின் First Spam செய்தி பரப்பப்பட்டது. குறிப்பிட்ட முகவரிக்கு அல்லாமல், அனைவருக்கும் அனுப்பப்படும் தேவையற்ற மின்னஞ்சல்கள்  Spam என்று அழைக்கப்படுகின்றன. Digital Equipment Corporation நிறுவனத்தின் புதிய கணினி கிடைப்பதைப்பற்றி, ARPANET’s network-க்கில் இணைக்கப்பட்டிருந்த 393 கணினிகளுக்கு இந்தச் செய்தி அனுப்பப்பட்டது. பொதுவாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவே தகவல்கள் அனுப்பப்படும்.

அக்காலத்தில், இந்நிறுவனத்திலிருந்த Gary Thuerk என்ற உதவியாளர் சோம்பேறித்தனத்தால் ஒரே செய்தியை அனைவருக்கும் அனுப்ப, அது கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. இந்த நிகழ்வு நடந்தபோது Spam என்ற பெயரே உருவாகியிருக்கவில்லை. 1970களில் BBC தொலைக்காட்சியில் நகைச்சுவைக் காட்சிகளை நடத்திய மாண்ட்டி paython என்ற குழுவினர், ஒரு காட்சியில் Spam என்ற சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியதையடுத்து, பிறரது குரலை மறைக்க அவ்வாறு கூறுவது பரவியது.

இதைத் தொடர்ந்து, bulletin board அமைப்புகளில் பிறரது தகவல்களைப் பின்தள்ள, மீண்டும் மீண்டும் SPAM என்று உள்ளிடத் தொடங்கினர். 1990களில் தேவையற்ற email-ளுக்கு இது பெயரானது. இந்த மாண்ட்டி paython குழுவினர் நகைச்சுவைகளுக்கிடையே கற்றுத்தரும் தகவல்களையும் கூறுவார்கள் என்பதால், அவர்களை மரியாதை செய்யவே paython மொழிக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. இதற்கெல்லாம் நூறாண்டுகளுக்கு முன்பே, western union தந்திச்சேவையிலிருந்த, பலருக்கும் அனுப்பும் வசதியைப் பயன்படுத்தி, 1864இல் ஒரு பல் மருத்துவர், பலருக்கும் விளம்பரச் செய்தியை அனுப்பி, முதல் spammer ஆகிவிட்டார்.

Green card பெற உதவுவதாக முதல் பெரிய விளம்பர spam ஒன்றை, ஒரு வழக்கறிஞர் தம்பதியும், முதல் நிதிதிரட்டும் spam , City Hope என்ற தொண்டு நிறுவனமும் 1994இல் அனுப்பினர். spam பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்த நிலையில், translator software கொண்டு, உள்ளூர் மொழியிலேயே அனுப்புவது 2009இல் தொடங்கியது. இன்று ஒவ்வொரு நாளும் 1450 கோடி spam's அனுப்பப்படுகின்றன. அதாவது, மொத்த email-களில்  45 சதவீதம் spam தான்.