திருடுவதில் ஏகப்பட்ட கில்லாடிகளை பார்த்திருப்போம். பல கச்சிதமான நகர்வுகள் மூலம் காவல்துறைக்கு தண்ணி காட்டிவிட்டு தப்பிக்கும் சாதுரியம் கொண்ட திருடர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கு முதலிரவு அறையில் அரங்கேறிய திருட்டு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு இளம் ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள ஒரு கோவிலில் திருமணத்தை முடித்துக்கொண்டு தனது வீட்டுக்கு மனைவியை அழைத்து வந்துள்ளார் மணமகன். புதுமணத்தம்பதிகளை வரவேற்று உபசரித்து அவர்களுக்காக முதலிரவு ஏற்பாடுகளை மணமகன் வீட்டார் செய்தனர். முதலிரவு அறையில் ஆசையாக காத்திருந்த மணமகனுக்கு கிடைத்தது யாரும் எதிர்பார்க்காத பரிசு.
கண்ணிமைக்கும் நேரத்தில் மணமகனை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு முதலிரவு அறையில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை மணமகள் கொள்ளையடித்து சென்றுவிட்டார். தாலி கட்டிய கணவனை முதலிரவு அன்று மனைவி தாக்கிவிட்டு அவரது உடமைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அந்த வீட்டிலுள்ளவர்களை பெரிதும் பாதித்துள்ளது. ஓடிப்போன மணமகள் என்ன ஆனார் என்று தெரியாத நிலையில் காயமடைந்த மணமகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்படியும் சில விநோத திருட்டு சம்பவம் நடப்பது திருமணமாகாத ஆண்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.