ஒரு நாலுக்கே கலங்கி போயிருமே..! ஆறு வருஷம் தாக்கு பிடிச்சுட்டாரா..?
  • 16:47PM Dec 04,2018 United States
  • Likes
  • 0 Views
  • Shares

your image

 

1991 ஆம் ஆண்டு லெபனானனில், 2,454 நாட்கள் பிணைக்கைதியாக இருந்த அமெரிக்க இதழியலாளர் டெர்ரி ஆண்டர்சன் விடுவிக்கப்பட்டார். மிக நீண்ட காலம் பிணைக்கைதியாக இருந்தவர் இவர்தான். லெபனான் உள்நாட்டுப்போர் உச்சமடைந்தபோது, 1982-92 காலத்தில், பல்வேறு நிகழ்வுகளில் 104 அந்நியர்கள் பிணைக்கைதிகளாகக் கடத்திச்செல்லப்பட்டனர். 21 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கடத்தப்பட்டிருந்தாலும், அமெரிக்கர்களும், மேற்கு ஐரோப்பியர்களும்தான் பெரும்பான்மையாகக் கடத்தப்பட்டனர்.

கடத்தல்களுக்குப் பல்வேறு அமைப்புகள் பொறுப்பேற்றாலும், ஹிஸ்புல்லா அமைப்பின் ஒரு சிறிய குழுவினரே அனைத்தையும் செய்ததாக, கடத்தப்பட்டவர்கள் தெரிவித்தனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவும் சிரியாவும் ஈடுபடுபதைத் தடுக்கவே இந்தக் கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசியல், ராணுவ காரணங்களுக்காகப் பிணைக்கைதிகளாக்குதல் மிகப்பண்டைய வரலாற்றிலேயே காணக்கிடைக்கிறது.

எதிரி நாடுகள், அடிமைப்பட்டுக் கப்பம் செலுத்தும் நாடுகள் ஆகியவற்றின் வாரிசுகள் உள்ளிட்டோரை அடைத்துவைத்து, தங்கள் நாட்டு உயர்குடியினருக்கு அளிக்கப்படும் கல்வி அளிப்பதன்மூலம், பின்னாளில் அவர்கள் அதிகாரத்துக்கு வரும்போது, தங்களுக்கு ஆதரவாகச் செயல்படச்செய்வதை பண்டைய ரோம, சீன, பின்னர் ஆங்கிலேய அரசுகளும் கடைப்பிடித்திருக்கின்றன.

1974இல் கடத்தப்பட்ட அர்ஜெண்டினா வியாபாரிகளான சகோதரர்கள் இருவரை விடுவிக்க தீவிரவாதிகள் பெற்ற 6 கோடி டாலர் (தற்போது ரூ.216 கோடி) தொகையே நவீன காலத்தின் மிகப்பெரிய பணயத்தொகையாகும். ஆனால், 1190இல் சிலுவைப்போர்களிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த, இங்கிலாந்தின் முதலாம் சார்லஸ் அரசரை, ஆஸ்திரியாவின் லியோபோல்ட் சிறைப்பிடித்தபோது பெற்ற பணயத்தொகை 1.5 லட்சம் மார்க்குள் (தற்போது ரூ.25,500 கோடி) ஆகும்.

புதியவர், எதிரி ஆகிய பொருள்களைக் கொண்ட, இடைக்கால லத்தீன் சொல்லான ஹோஸ்டிஸ் என்பதிலிருந்து உருவான, ஓஸ்டேஜ் என்ற பிரெஞ்சுச் சொல்லிலிருந்து, ஆங்கிலத்தில் ஹோஸ்டேஜ் என்ற சொல் உருவானது. 2007இல் இரானில் சிறைப்பிடிக்கப்பட்டதாக நம்பப்படும் அமெரிக்க எப்பிஐயின் ராபர்ட் லீவின்சன் பற்றிய தகவல்கள் இன்றுவரை தெரியவில்லை. அவர் உயிருடன் இருந்தால், டெர்ரி ஆண்டர்சனைவிட அதிக காலம் பிணைக்கைதியாக இருந்தவராக ஆகிவிடுவார்.

Share This Story

You Might Also Like These
Related Stories
Top