தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் முதல் திருநங்கை வேட்பாளர்!
  • 12:20PM Apr 12,2019 Chennai
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:20PM Apr 12,2019 Chennai

தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் திருநங்கை ராதா. பொருளாதாரம் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஆனால் இவர் திருநங்கை என்ற ஒரே காரணத்தால் சரியான வேலை கிடைக்காமல் தவித்து வந்துள்ளார்.

Image result for திருநங்கை வேட்பாளரான ராதா

அனைத்து இடங்களிலும் தனது திறமை, தகுதியை காட்டிலும் பாலினத்துக்காக வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், வேலை தேடுவதைக் கைவிட்டு, அக்கம்பக்கத்தில் இருக்கும் வீடுகளில் சமையல் வேலைகளைச் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் அனைவர்க்கும் ஆச்சர்யம் ஏற்படுத்தும் வகையில் ஒரு முடிவை எடுத்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார். இவரது இந்த முடிவுக்கு அப்பகுதியை சேர்ந்த பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் இவருக்குக் கம்ப்யூட்டர் மவுஸ் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

Image result for திருநங்கை வேட்பாளரான ராதா

இவரும், இவரது தோழி நிலா என்பவரும் தென்சென்னை பகுதிகளுக்குச் சென்று சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிக்கும் இவரைப் பெரும்பாலான மக்கள் ஆதரித்து வருகின்றனர். தனக்கு வாய்ப்பளித்தால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறி ராதா வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top