குழந்தைகளின் திறமையை கண்டுபிடிக்க சில வழிகள்
  • 11:37AM Nov 23,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 11:37AM Nov 23,2017 Chennai, Tamil Nadu 600003, India

இன்றுள்ள காலகட்டத்தில் குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் பல தவறுகளைச் செய்து வருகின்றனர்.குழந்தைகளை அவர்களின் போக்கில் வளரவைப்பதை விடப் பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு ரோபோவை போல வளரவைக்கின்றனர்.பெற்றோர்களின் கட்டளைக்கேற்ப குழந்தைகள் ஆடவேண்டும் என்ற எண்ணம் பரவலாக அனைவரிடமும் இருக்கிறது.உங்கள் குழந்தைகளின் திறன் அல்லது அவர்களின் ஆர்வம் எந்தத் துறையில் இருக்கிறது என்பதை அறிய சில வழிகள்.

குழந்தைகள் வளரும் பருவத்திலேயே அவர்கள் என்னவாக வேண்டும் என்று பெற்றோர்கள் முடிவெடுத்துவிடுகின்றனர்.இது குழந்தைகளின் திறனை வெளிப்படுத்தப் பெற்றோர்கள் போடும் முதல் தடை.அக்கம் பக்கத்தில் குழந்தைகள் யாராவது இருந்தால் அவர்களுடைய குழந்தையை ஒப்பிட்டுப் பேசுவது என்று அவர்களை மனதளவில் பாதிப்படைய வைக்கிறார்கள்.இத்தகைய செயல்களை முதலில் தவிர்க்க வேண்டும்.

 சில குழந்தைகளிடம் பென்சில் அல்லது பேனா போன்று ஏதாவது கிடைத்தால் போதும் சுவர் மற்றும் பல இடத்தில் கிறுக்கி விளையாடுவார்கள்.அத்தகைய குழந்தைகளுக்கு வரைவதில் ஆர்வம் அதிகம் இருக்குமாம்.அத்தகைய குழந்தைகளிடம் பெற்றோர்கள் வரைவதற்கான ஆர்வத்தைத் தூண்டினால் போதும் அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

ஒரு சில குழந்தைகள் வீட்டில் ஏதாவது பொருள் புதிதாக இருந்தால் அதை எடுத்துப் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுவார்கள்.அத்தகைய குழந்தைகளுக்குத் தான் புதிதாகக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்குமாம்.

சில குழந்தைகள் ஒரு இடத்தில் அமைதியாக இருக்க மாட்டார்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பார்கள் மேலும் கையில் இருக்கும் பொருள்களைத் தூக்கிப் போடு விளையாடுவார்கள் அத்தகைய குழந்தைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருக்குமாம்.அப்படிப் பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டுகளில் ஈடுபடப் பெற்றோர்கள் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.

குழந்தைகளிடம் அதிகம் பேச வேண்டும் அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று அவர்களிடம் இருந்தே கேட்டு அறிதல் வேண்டும்.அப்படி அவர்கள் கூறும் துறையில் பெற்றோர்கள் தகவல்களைச் சேகரித்து நேரத்திற்கேற்ப குழந்தைகளிடம் கூறிவந்தால் அவர்கள் அத்தகைய துறையில் அதிகம் ஈடுபட முடியும்.

குழந்தைகள் செய்யும் சிறிய செயல்களைக் கூடப் பாராட்டி வந்தால் போதும் இதை விடச் சிறந்து ஊக்குவிக்க வேறு யாரும் இல்லை.குழந்தைகளின் ஆர்வத்தில் பெற்றோர்கள் அதிகம் ஈடுபட்டால் அது அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top