படங்களும், விமர்சனங்களும்...
  • 12:32PM Nov 02,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 12:32PM Nov 02,2017 Chennai, Tamil Nadu 600003, India

படங்களும், விமர்சனங்களும்...

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை படங்கள் இத்தனை தூரம் விமர்சனங்களுக்கு உள்ளானதில்லை.  ஆனால், கடந்த சில ஆண்டுகளில் திரைப்படங்கள் மிகக்கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.  இவர்களில் எத்தனை ரகங்கள்???

முதல் ரகம், இணைய ஞானிகள்... இணையத்தில் அனைத்து விதமான தகவல்களை பெற முடியும் என்பதாலேயே நிறைய திடீர் ஞானிகள் உண்டாகி விட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.  நான் மட்டும் டைரக்டராக இருந்திருந்தா அப்படி பண்ணி இருப்பேன், இப்படி செய்து இருப்பேன், என்ன ஆங்கிள் வைக்கிறான் என்பது போன்ற வெளிப்பாடு.  உண்மையில், இன்றுவரை கமல் அவர்கள் கூட நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்வார்... இவர்கள் நானெல்லாம் படம் எடுத்தாலே ஹிட்தான் என்ற ரீதியில் பேசுவார்கள். ஆனால், ஒரு ஷார்ட் பிலிம் கூட எடுக்க முடியாது இவர்களால்.

இரண்டாவது ரகம், ட்ரெண்ட் போலோவ்ர்ஸ்... இவர்களுக்குத் தான் யாருடைய ரசிகன் என்று கூட யோசிக்கத் தோன்றாது... ஆனால், எந்தப் படம் வந்தாலும் கழுவி ஊத்தலைன்னா அவுட் ஆஃப் ட்ரெண்ட் ஆகப் போய் விடுவோம் என்ற காரணத்தினாலேயே கழுவி ஊத்துவார்கள்.  நான் ஒரு படத்தில் இணை இயக்குநராகப் பணி புரியும்போது, ஒரு நண்பர் இப்படித்தான் எல்லாப் படத்தையும் கழுவி ஊத்துவார். ஆனால் ஒரு scene discussion-லும் உட்கார மாட்டார். 

மூன்றாவது ரகம், ரசிகர்கள்... இவர்கள் தங்கள் நாயகன் படம் பார்ப்பதைத் தாண்டி, முதல் நாளே அடுத்த கதாநாயகர்கள் படத்தைப் பார்த்துவிட்டு, நம்ம கதாநாயகன் படம் மாதிரி இல்லை என்று விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவே மாட்டார்கள்.  கதாநாயகர்கள் அவர்கள் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் படமாக மட்டுமே பார்த்து நடிப்பார்கள். வேறொரு கதாநாயகன் படம் உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் கதாநாயகனுக்கு நீங்கள் ரசிகராக இருக்க மாட்டீர்கள்... அஜீத் நடிக்கும் படங்கள் பிடித்திருப்பதால்தான் ஆஜீத் ரசிகராக இருப்பார்கள், விஜய் நடிக்கும் படங்கள் பிடித்திருப்பதால்தான் விஜய் ரசிகராக இருக்கிறார்கள். இதையும் தாண்டி வெகு சில படங்கள் மட்டும் அனைத்து ரசிகர்கள் ரசிக்கும் படமாக இருக்கும்...

நாலாவது ரகம், FDFS கடுப்பாளர்கள்... படத்தின் ட்ரைலரை பார்த்து விட்டு, 120 ரூபாய் டிக்கெட்டை 500, 1000, 2000 ரூபாய் என எந்த விலைக்கும் வாங்கிவிட்டு, ரெண்டு நாள் கழிச்சு 120 ரூபாய்க்குப் பார்த்திருக்கலாம் என்று இன்டெர்வலில் அமர்ந்து யோசிப்பவர்கள்.  இவர்களது இந்த கடுப்பு அப்போதே மொக்கை என்ற ஸ்டேட்டஸ் போடுவதில் தொடங்கி, இவர்கள் அதிகமாகச் செலவழித்த தொகையை விட அதிகமாக இணைய பில் வரும்வரை, அல்லது வேறொரு FDFS வரும்வரை தொடர்வார்கள்.

ஐந்தாவது ரகம், வியாபார விமர்சகர்கள்... சின்ன youtube சேனல் அல்லது லோக்கல் TV இப்படி ஏதாவது ஒன்றை வைத்துக் கொண்டு, அதை இப்படிப் பேசித்தான் பிரபலப்படுத்த வேண்டும் என்று பேசுபவர்கள்.  கொஞ்சம் வளர்ந்த பிறகு, கொடுக்கப்படும் காசுக்கு இதான் விமர்சனம் என்ற ரீதியில் பேச ஆரம்பிப்பார்கள். இவர்கள் கமெண்ட்டைப் பார்த்து நீங்கள் படம் பார்க்கப் போனால் கண்டிப்பாக ஏமாற்றம் ஒன்றுதான் மிச்சம்.  இப்படிப் போய் பார்த்தவர்கள் கண்டிப்பாக கழுவி ஊத்தும் லிஸ்டில் அவர்களாகவே சேர்ந்து விடுவார்கள். விமர்சகர்கள் மட்டும் படத்தின் நிறை குறைகளை முழுமையாகப் பேசினால் போதும், வரும் காலங்களில் கண்டிப்பாக மிகச் சிறந்த படங்களை நாம் பார்க்க முடியும்...

ஆறாவது ரகம், கற்றுக் கொள்பவர்கள்... எப்படிப்பட்ட படத்தையும் பார்த்து விடுவார்கள். மக்களிடம் போய் சேர வேண்டும் என்று நினைக்கும் படத்தை மட்டும் பொதுவெளியில் பேசுவார்கள்... இவர்களால் மட்டுமே ஜோக்கர், மைனா, தெகிடி, அப்பா, வாயை மூடிப் பேசவும், பிஸ்சா, பசங்க போன்ற படங்கள் சிறிது காலம் திரையரங்குகளில் ஓடியது என்று கூட சொல்ல முடியும். எவ்வளவு மொக்கையாக இருந்தாலும், அதிலிருந்து ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ளும் உண்மையான சினிமா காதலர்கள்...

எல்லா ரகத்தையும் படிச்சுடீங்களா??? இப்போ நீங்க எந்த ரகம்னு முடிவு பண்ணிக்கோங்க... குறைந்தபட்சம் அடுத்த பட வெளியீட்டில், சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கும் நண்பர்களைப் புரிந்து கொள்ளவாவது உதவும் இல்ல...

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top