திரைப்படம் உருவாகிறதெப்படி???
  • 14:33PM Oct 27,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:33PM Oct 27,2017 Chennai, Tamil Nadu 600003, India

Post-Production ல் செய்யும் வேலைகள்தான் ஒரு படத்தின் தரத்திற்கும், காட்சியமைப்பின் சுவாரஸ்யத்திற்கும், படம் ரிலீஸ் ஆவது போன்ற பல விஷயங்களுக்கும் அடிப்படை.  தற்போது பெரும்பாலான இயக்குநர்கள் ஷூட்டிங் நடக்கும்போதே எடிட்டிங் செய்து விடுகிறார்கள்.  இதனை ஸ்பாட் எடிட்டிங் என்று சொல்வார்கள்.  இருப்பினும், திருப்தியான வெளிப்படு வேண்டும் பட்சத்தில், முதலில் DI என்று சொல்லப்படும் டிஜிட்டல் இமேஜிங், அதாவது காட்சியின் நிறம், டோன் எனப்படும் மூடை வெளிப்படுத்தும் வண்ணக் கலவை, அனைத்துக் காட்சிகளுக்கும் அடிப்படையான நிறம், லைட்டிங் அதிகப்படுத்துதல் மற்றும் குறைத்தல் – மொத்தத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் process செய்து முடித்த பிறகே எடிட்டிங் அறைக்கு கொண்டு செல்லப்படும்.  காரணம், எந்தக் காட்சியமைப்பு தேவையென்று எடிட்டிங்கிற்கு முன் தெரியாது.  மாறி மாறி வெட்டி சரி செய்யும்போது, சமயத்தில் ஷூட்டிங் சமயத்தில் வேண்டாமென ஒதுக்கிய காட்சிகளிலிருந்தும் சிறு பகுதிகளை எடுக்க நேரிடும்.  அதனால், ஸ்பாட் எடிட்டிங்கை விட இந்த முறையே சிறந்தது.

எடிட்டிங் ரிப்போர்ட் என்று ஒன்றைப் பார்த்தோமல்லவா??? இதில்தான் காட்சிக்குத் தேவைப்படும் ஷாட்கள், ஒரு காட்சிக்கு எத்தனை ஷாட்கள் எடுக்கப்பட்டது, இயக்குநர் சரி என்று சொல்லிய ஷாட்கள், அந்தக் காட்சிக்கு கிராபிக்ஸ் தேவையா என அனைத்தும் இருக்கும்.  இதை சரிவர கையாளும் பட்சத்தில், எடிட்டிங் மிகச் சுலபமாக முடிந்துவிடும். படம் இயக்குநரின் கற்பனைக்கேற்ப முழு வடிவம் பெற்று விடும்.  கிராபிக்ஸ் தேவைப்படும் பட்சத்தில், பெரும்பாலும் DI செய்யும் இடங்களிலேயே அந்தப் பணியும் செய்து கொடுக்கப்படும்.  இங்கிருந்து நேராக ரெக்கார்டிங் ஸ்டூடியோ செல்லும் அந்தத் திரைப்படம்.  அங்கு டப்பிங், மிக்ஸிங், SFX எனப்படும் சவுண்ட் எபெக்ட்ஸ் போன்றவை செய்து முடிக்கப்படும்.  பாடல்கள் பெரும்பாலும் ஷூட்டிங் செல்வதற்கு முன்பே தயார் செய்யப்படும்.  காரணம், கிடைக்கும் இடங்களில் பாடல் வரிகளுக்கேற்ப ஷூட்டிங் எடுக்கும் போதே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பெரும்பாலும், Post Production இதோடு முடிந்துவிடும் என பலர் கருதுவார்கள்.  இந்தக் காலகட்டத்தில் PRO-வின் பணி மீண்டும் துவங்கி இருக்கும். தற்போது, ப்ராண்டிங் நிறுவனங்களும் PRO-க்களின் பணிக்குத் துணை நிற்கின்றன.  இவை அந்தப் படத்திற்கு எந்த மாதிரியான விளம்பரங்கள் தேவை, எப்படி மக்களை ஈர்க்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டுத் தர, PRO அதற்கான வேலைகளில் இறங்குவார்.  இப்படி அனைத்து விதங்களிலும் படம் விளம்பரப்படுத்தப்பட்டு, எதிர்பார்ப்பு ஏற்படும் நேரத்தில் விநியோகஸ்தர்களுக்கான ப்ரிவியூ ஷோ, படத்தின் விளம்பரப் பிரிவின் மூலம் ஏற்பாடு செய்யப்படும். முன்பெல்லாம் படத்தின் பாடல் முடிந்தபின், பாடல் வெளியீட்டு விழா ஒன்று நடத்தப்படும். தற்போது பாடல்கள் குறைவாகவும், சுலபமாக டவுன்லோட் செய்யும் விதமாக இருப்பதாலும் பெரும்பாலும் நடத்தப்படுவதில்லை.  படத்தைப் பார்க்கும் விநியோகஸ்தர்கள் விலையைக் கேட்க, பட விற்பனை துவங்கும். 

ஒருவழியாக விநியோகஸ்தர்கள் கைக்கு வரும் படங்கள், அவர்கள் மூலமாக நமக்கு அருகிலிருக்கும் திரையரங்கிற்கு வரும்.  தயாரிப்பாளர் தரப்பிலிருக்கும் ஒரு குழு விநியோகஸ்தர் குறிப்பிடும் லாப நட்டக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருக்கும்.  எந்தத் தியேட்டரில் எத்தனை ஷோ, ஷோவில் எத்தனை பேர் என்பதெல்லாம் இந்தக் குழு கணக்கடுக்கும்.  காரணம், லாபப் பகிர்வில் தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுப்பதை உறுதி செய்ய… இவர்கள் இல்லாமல் இயக்குநர் அவர் சார்பாக படத்தைப் பற்றி மக்கள் கருத்தை அறிய, தியேட்டர் தியேட்டராகச் சென்று மக்கள் கருத்தை அறிய குழு ஒன்றையும் அமைத்திருப்பார்.  எந்த காட்சிக்கு மக்கள் எப்படி React செய்கிறார்கள் என்பது முதற்கொண்டு அனைத்தையும் அவர்கள் இயக்குநரிடம் கொண்டு சேர்ப்பார்கள்.  இதுவே, அவரது அடுத்த படத்தின் கதைக்கான அஸ்திவாரம். 

இத்தனை பேர், இத்தனை விதமாக உழைக்கும் உழைப்புதான் நாம் இரண்டு மணி நேரங்களில் பார்க்கக் கூடிய சினிமா.  கேட்கும் போதே தலைசுற்றுகிறதல்லவா??? ஒரு முழுமையான திரைப்படம் அனைத்து கட்டங்களையும் தாண்டி திரைக்கு வரவே குறைந்தபட்சம் 6 மாதங்கள் தேவைப்படும்.  ஸ்டோரி போர்டு அமைத்து கதையைப் படம் பிடிக்கப் போனால் கண்டிப்பாக 9 மாதங்கள் ஆகிவிடும்.  அடுத்த முறை திரைக்கு முன் அமரும் போது படத்தை மட்டும் கவனிக்காமல் சுற்றி நடக்கும் மற்ற துறைகளையும் கவனிக்கப் பழகுங்கள்.  உங்களுக்குள் எத்தனை சினிமா இருக்கிறது என்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்டுத்தான் போவீர்கள்…

Top