திரைப்படம் உருவாகிறதெப்படி???
  • 14:04PM Oct 27,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:04PM Oct 27,2017 Chennai, Tamil Nadu 600003, India

முதல் பாகத்தில் Pre-Production பற்றி விரிவாகப் பார்த்தோம்.  இனி ஷூட்டிங் எனப்படும் Production பற்றிப் பார்ப்போம். Schedule படி தேவையான அனைத்து லொகேஷன் மற்றும் permission - லொகேஷன் மானேஜர், Production மானேஜர், தேவைப்பட்டால் PRO மூலமாக நாள்வாரியாக தயார் செய்யப்படும்.  அசிஸ்டண்ட் டைரக்டர் மற்றும் அஸோசியட் டைரக்டர் என துணை இயக்குனர்களிலேயே இரண்டு பிரிவுகள் உண்டு.  இணை இயக்குனர் என்பவர் தனி, அவருக்கு ஒரு டைரெக்டர்க்கு உண்டான அனைத்துப் பொறுப்புகள் அவருக்கு உண்டு.  பெரும்பாலான படங்களில் இணை இயக்குநர் இருப்பதில்லை.  Associate டைரெக்டர்க்கு இயக்குனருக்கு அடுத்தபடியான முக்கியமான வேலைகள் ஒதுக்கப்படும்.  நடிகர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுப்பது, அவர்களுக்கான ஆடைகளை வடிவமைப்பாளரிடமிருந்து காட்சி தொடர்பு மாறாமல் பெற செய்வது, எடிட்டிங் ரிப்போர்ட் எழுதுவது, இயக்குனர் இல்லாத நேரங்களில் monitor பார்ப்பது போன்ற வேலைகள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்... அசிஸ்டண்ட் டைரெக்டர்களுக்கு ஷூட்டிங் இடத்தினை தயார் செய்வது, ஷூட்டிங் நடக்கும் வேளையில், குறுக்கே யாரும் வராமல் பார்த்துக்கொள்வது போன்ற வேலைகள் அளிக்கப்படும்.

Schedule படி நடிகர்கள் வந்தவுடன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும். பல நாட்களாக நிறைய பேருக்கு கிளாப் எதற்கு அடிக்கிறார்கள் என்பது புரியாமல் இருக்கும். எடிட்டிங் ரிப்போர்ட் எழுதுவதற்கு நிற்பவர்களுக்கு எந்த காட்சி, அதில் எத்தனை ஷாட் எடுக்கிறார்கள், அதில் எது திருப்தியளிக்கும் விதமாக வந்திருக்கிறது என்று மனதில் வைத்துக் கொண்டிருக்க முடியாது.  கிளாப் போர்டில் இவை எழுதப்பட்டிருக்கும். எடிட்டிங் ரிப்போர்ட் சரியாக எழுதும் பட்சத்தில், ஷூட்டிங் முடிந்து எடிட்டிங் போகும் போது நேரம் மிச்சப்படும்.  கிளாப் போர்டில் எழுதப்பட்டிருக்கும் தகவல், எடிட்டர் தேடும் போது அந்தக் காட்சி சுலபமாக கிடைக்க வழி செய்யும். இதுதான் கிளாப் போர்டின் ரகசியம்... இப்பொழுது இது தேவையில்லை என்றாலும் கிளாப் போர்டுகள் ஒரு சம்பரதாயமாகி விட்டது. பூஜை போட்டு கிளாப் அடிக்க, அவரவர் அவரவர் பணியினை செய்யத்துவங்கி விடுவார்கள்... பெரும்பாலும், production களப்பணி என்பதால் வரும் அனைத்து பிரச்னைகளையும் direction டிபார்ட்மெண்ட்தான் தாங்கியாக வேண்டும்.  முடித்த பிறகு திருஷ்டி கழித்தல் போன்ற சடங்குகளுடன் எடுக்கப்பட்ட காட்சிகளுடன் கோடம்பாக்கத்திற்கு வந்து விடுவார்கள். Production வெற்றிகரமாக முடிந்தது.

Post-Production பற்றி பேச அதிகம் இருப்பதால், இந்தப் பதிவை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top