திரைப்படம் உருவாகிறதெப்படி???
  • 13:35PM Oct 27,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 13:35PM Oct 27,2017 Chennai, Tamil Nadu 600003, India

பொதுவாக ஒரு திரைப்படம் கதைக்கருவில்தான் முதலில் துவங்கும்.  பெரிய நடிகர்கள் படங்கள் சில, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் முடிவான பிறகுதான் கதைக்கு போகும்... மற்றபடி, கதைக்கருதான் முதல் படி... அந்த கதை Oneline எனப்படும், காட்சிகளை வரிசைப்படுத்தும் ஒற்றை வரி கதை உருவாக்கம் நடைபெறும். இது மேலும் விரிவாக்கம் அடைந்து Descriptive Oneline ஆக மாறும்.  இந்த இடத்தில்தான் அந்தக் காட்சியில் நடைபெறும் முக்கிய விஷயங்கள், வசனங்கள் என்பவை குறிக்கப்படும்.  இனி வரும் கட்டம் மிக முக்கியமானது. Treatment.  அதாவது காட்சியை முழுமைப்படுத்துதல்.  அந்த குறிப்பிட்ட காட்சியில் இருக்க வேண்டிய பொருள்கள், கையாளும் விதம், சிகரெட்டை எப்படி எடுக்கிறார், இந்தக் கையில் பற்ற வைக்கிறார் முதற்கொண்டு ஒவ்வொரு சின்ன சின்ன அசைவையும் கூட இதில் குறித்தாக வேண்டும். அடுத்ததாக, இதனை வைத்து Dialogue Version, அதாவது வசனம் முழுமையாக எழுதப்படும். 

பெரும்பாலான இயக்குனர்கள் இதோடு அடுத்த கட்டத்திற்கு போய் விடுவார்கள். சிலர் மட்டுமே அடுத்த கட்டமாக, Shot Seperation எழுதுவார்கள். அதாவது அந்த காட்சியில், கேமரா எங்கு இருக்க வேண்டும், நடிப்பவர்கள் எப்படித் தெரிய வேண்டும் என்பதெல்லாம் இதில்தான் குறிப்பிடப்படும். இங்கிருந்து கதாசிரியர் கையில் இருந்து கதை வெளியே போகும்.  பெரும்பாலும் இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் இந்தப் பணியை செய்து முடிப்பார்கள். சில நேரத்தில் கதாசிரியர்கள் இதனை செய்ய வேண்டி வரும்.

அடுத்த கட்டமாக, ஆள் தேர்வு. பெரும்பாலும் வசனம் எழுதும் முன்னரே முக்கிய கதாப்பாத்திரங்கள் இவர்கள் என்ற கற்பனையில் கதையில் வசனங்கள் எழுதப்படும்.  இவர்களை தேடிக் பிடிக்க Casting Manager-கள், அல்லது PRO-க்கள் உதவி கொண்டு செய்யப்படும்.  இடையில், தயாரிப்பாளரிடம் கதையை சொல்லி, படத்தின் பட்ஜெட் சொல்லி ஒப்புதல் வாங்கும் பணியையும் director செய்தாக வேண்டும்.  ஒருவேளை தயாரிப்பாளர் கதையில் மாறுதல் சொன்னால், அல்லது தேவைப்படும் ஆட்கள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் ஒரு முறை கதை வசனம், காட்சி அமைப்புகள் போன்றவற்றில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.  கிடைத்த ஆட்களின் நடை, உடை, பாவனை, பேச்சு இவற்றைக் கொண்டு. இந்த இடத்தில்தான் அனைத்து technician, cameraman அனைவரும் முடிவு செய்யப்படுவார்கள். தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஒன்று அல்லது இரண்டு production manager-கள் கொடுக்கப்படுவார்கள்... அவர்களிடமே நிதி நிர்வாகம் முழுவதும் இருக்கும். திரைப்படத்திற்கு தேவையான அனைத்து ஆட்களுக்கும் agreement போடுவது, advance, ஷூட்டிங் permission என அனைத்துமே இவர்கள் பொறுப்புதான்.  கிட்டத்தட்ட தயாரிப்பாளரின் பிம்பம் என்று கூட இவர்களை சொல்லலாம்.  டைரக்டர் தேவைப்பட்டால் அவர் தரப்பிலிருந்தும் ஒருவரை பணியமர்த்தலாம்.

ஆட்கள் தேர்வு நடக்கும் போதே, திரைக்கதைப்படி location chart தயாரிக்கப்படும்.  லொகேஷன் சார்ட் மற்றும் ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட் வைத்து இறுதியாக Schedule போடப்படும்.  இந்த scedule-தான் படப்பிடிப்பு நடைபெறும் நாட்கள், budget இறுதி செய்வது போன்ற அனைத்தையும் முடிவு செய்யும். இத்தனை விஷயங்களும் ஒரு சேர முடிவு செய்தபின் அடுத்த மிக முக்கியமான கட்டத்திற்கு படம் செல்லும். அது Production எனப்படும் ஷூட்டிங். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

மேலே கூறிய அனைத்துமே சினிமாவில் ஒரே வார்த்தையில் அடங்கும்... அது Pre-Production...

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top