ஓரினசெயற்கையாளர்களின் உணர்வும்,சமுதாயத்தின் பார்வையும்!
  • 09:23AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 09:23AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

Image result for lgbt

நம் சமூகத்தில் பல வேற்றுமைகள் ஒன்றிணைந்து இருந்தாலும் ஒரு சில மக்களை பாகுபாடு படுத்தி ஒதுக்கத்தான் செய்கிறோம்! அதிலும் சிலரின் உணர்வைமதிக்காமல் இகழ்வதும் நமது நாட்டில் நடக்கத்தான் செய்கிறது. இது அவர்களது வாழ்க்கையின்  சாபமா இல்லை மக்களின் புரிதல் தன்மை குறைவா என்று தெரியவில்லை!!

Pride On LGBT- Societal Equality

GAY,LESBIAN என்று அழைக்கப்படும் ஓரினசெயற்கையாளர்களை பற்றி தவறான கருத்துக்களே நமது சமுதாயத்தில் பரவியுள்ளது! அவர்களது வாழ்க்கையின்  மறுபக்கத்தையும்,உணர்வையும் யாரும் எண்ணி பார்ப்பதில்லை.. அவர்களுக்கு உண்டான மரியாதையையும் நாம் தருவதற்க்கு தயங்குகிறோம். சில சூழ்நிலைகளில் தங்களது உணர்வை வெளிப்படுத்தவும் முடியாமல்,தங்களது நிலையை சமூகம் ஏற்காத காரணத்தால் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

Related image

சில வெளிநாடுகளில் இவர்களுக்கு சம உரிமை அளித்து அவர்களை மதிக்கும் பொழுது,நமது நாட்டில் அவர்களின் உறவுகளே மதிக்காத நிலையில் "வேற்றுமையில் ஒற்றுமை" என்று கூறுவதில் ஒரு பயனும் இல்லை.

 

இதை தாண்டி சமுதாயத்தில் அவர்கள் படும் சில இன்னல்களை பற்றி பார்ப்போம்!!

 

1.தன்னை பெற்ற தாய்,தந்தையிடம் தான் ஒரு ஓரினசெயற்கையாளன் என்று கூறும்பொழுது ஏற்படும் பயம்.

 

2.உற்றார் உறவினர் தன்னால்  அவனது குடும்பத்தை இழிவுபடுத்த கூடுமோ என்ற குற்றவுணர்ச்சி

 

3.சில மதங்களில் இவர்கள் செய்வது பாவம் என்று கூறி,ஒதுக்குதல்!

 

4.தன்னை புரிந்து கொள்ள யாரும் இல்லாத காரணத்தால்,தனிமையை தேடி,குடும்ப உறவைவிட்டு வெளியேறுதல்.

 

5.சகமாணவர்களிடம் இருந்து உணர்வுரீதியாக  வேறுபடுவதால்,பள்ளி வாழ்க்கையே ஒரு நகரமாக மாறும் சூழ்நிலை.

 

6.சமுதாயத்தில் தனக்கென்று ஒரு நிரந்தர வேலை,நண்பர்கள் அமையாததால்,புறக்கணிக்கப்பட்டு தனிமைப்படுத்தபடுகிறார்கள்.

 

7.இந்த உறவுமுறைகளை தாண்டி,தனக்கென்று இருக்கும் லட்சிய கனவுகளை அடைய ஒரு ஆதரவும் இல்லாத சூழ்நிலை உண்டாவது.

 

 

8.சமூகத்திற்காக விருப்பம் இன்றி திருமணம் செய்து,பின் விவகாரத்தாகி இருவரின் வாழ்க்கையிலும் ஒரு கசப்பான அனுபவம் உண்டாவது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top