FARMERS SUBSIDY: பிரதமருக்கு ரூபாய் 17-ஐ திருப்பி அனுப்பிய விவசாயிகள்!!! தஞ்சையில் விவசாயிகள் நூதனப் போராட்டம்!!!
  • 15:45PM Feb 07,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:45PM Feb 07,2019 Chennai

மோடி தலைமையிலான அரசு சமீபத்தில், இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. அதில் விவசாயிகளுக்கு மானியமாக வருடத்திற்கு ரூபாய் 6000 வழங்குவதாக அதில் அறிவிக்கப்பட்டது. முதலில், இடைக்கால பட்ஜெட்டில் தாக்கல செய்யப்படும் விஷயங்கள் நடைமுறைக்கு வரவவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு என்பதால், வழக்கமான இடைக்கால பட்ஜெட் என்பது அந்த மூன்று மாத காலத்திற்கு தேவையான செலவினங்களை மட்டும் குறித்து வருவதுதான் வழக்கம். இந்த வழக்கத்தையும் மீறி, முழு பட்ஜெட் போலவே தாக்கல் செய்தது ஏற்கெனவே எதிர்க்கட்சிகளினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், FARMERS SUBSIDY-யை அறிவித்து விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை வேறு அப்பட்டமாகக் காட்டியும் விட்டது மத்தியில் ஆளும் பாஜக அரசு. காரணம், விவசாயிகள் குத்துமதிப்பாக ஒரு நாள், ஒரு ஆள் கூலிக்கு மட்டும் குறைந்தபட்சம் ரூபாய் 350 கொடுக்க வேண்டும். TRACTOR ஓட்டுபவர்களின் கூலி குறைந்தபட்சம் ரூபாய் 800, அதோடு டீசல் தனி. இவர்களுக்கு வர வேண்டிய தொகை நிலுவைகளே கோடிக்கணக்கில் இருக்கிறது. இந்நிலையில் மாதம் 500 ரூபாய் என்பது அவர்களுக்குப் பொருட்டே இல்லை என்று கூடச் சொல்லலாம்.

இதனால், இதனை எதிர்த்து, தஞ்சையில் இருந்து விவசாயிகள், பிரதமருக்கு ரூ.17 மணியார்டர் அனுப்பினர். அப்போது அவர்கள் கடனைத் தள்ளுபடி செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது நாள் ஒன்றுக்கு ரூ.17 எனக் கூறி விவசாயிகள் பிரதமருக்கு ரூ.17 மணியார்டர் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில், தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை தலைமை தபால் நிலையத்துக்கு வந்து பிரதமருக்கு ரூ.17 மணியார்டர் அனுப்பினர். பின்னர் அவர்கள் தலைமை தபால் நிலைய வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர் சுகுமாறன் நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகையாக சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.17 வீதம் வழங்கப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை. நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.17 என்பது 1 நாளைக்கு டீ ரூ.10 மற்றும் வடை ரூ.7 ஆகும் செலவு ஆகும். எனவே பிரதமருக்கு ஊதியமாக விவசாயிகள் ரூ.17 வழங்கும் வகையில் மணியார்டர் அனுப்பி உள்ளோம். எனவே உடனே அனைத்து பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வருகிற 8-ந்தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் தமிழக அரசு இதை அறிவிக்க வேண்டும்”என்றார். ஆனால், நிச்சயம் இதை மத்தயி அரசோ, மாநில அரசோ தள்ளுபடி செய்யாது என்பது வரைக்கும் நிஜம். விவசாயிகளின் போராட்டம் என்ன ஆகிறது பார்க்கலாம்!!!

Share This Story

You Might Also Like These
Related Stories
Top