மறந்தும் மறுக்கப்பட்ட விவசாய போராட்டம்....
  • 10:25AM Sep 20,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 10:25AM Sep 20,2017 Chennai, Tamil Nadu 600003, India

தமிழக விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கு மேல் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர்கள் பிரதமரை சந்திக்கப் பல முறை முயன்றும் அவர்களை அவர் சந்திக்க மறுக்கிறார் என்று திட்டவட்டமாக தெரிகிறது.அவர்களும் பல யுக்திகளைக் கையாண்டும் உள்ளனர் இருந்தும் பிரதமர் அலுவகத்தில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.இறுதியாக அவர்கள் நிர்வாணமாக ஓடியும் தங்களின் சொந்த கழிவுகளை உண்டும் போராட்டத்தை நடத்தினர் இருந்தும் அவரின் பார்வை இவர்களின் பக்கம் திரும்பாதது ஏன் ???


தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வறட்சியைப் போல் இந்த ஆண்டு மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளது எனவே தமிழகத்தை வறட்சிக்குள்ளான மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டும் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த இரண்டில் ஒன்று நிறைவேறாவிட்டாலும் அவர்களின் நிலை சற்று கவலைக்கிடமே.பிரதமர் ஒரு குறிப்பிட்ட குழுமத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டிற்குத் தமிழகம் வந்துள்ளார்,மேலும் கேரளாவில் மெட்ரோ ரயில் திறப்பதற்காகவும் வந்துள்ளார் ஆனால் அவரால் அவரின் அலுவலகத்தின் வெளியே உள்ள விவசாயிகள் படும் சிரமத்தைப் பார்க்க நேரமில்லை என்று தோன்றுகிறது.


தமிழகத்தில் தண்ணீர் இல்லை என்று முழுவதுமாக கூறமுடியாது.தமிழகத்தில் பழமை வாய்ந்த பல ஆறுகள் உள்ளது இருந்தும் விவசாயத்திற்குத் தண்ணீர் இல்லை. தமிழகத்தில் உள்ள பல தொழிற்சாலைகள் தண்ணீரை உறிஞ்சும் தொழிற்சாலைகளே.பல குளிர்பான நிறுவனங்கள் ஆறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து தாங்கள் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துகின்றனர். இதனால் விவசாயிகளுக்குத் தண்ணீர் சரிவரக் கிடைப்பதில்லை. விவசாயத்திற்குப் பயன்பட்ட பின்னர் தண்ணீர் எடுக்கலாம் என்று தொழிற்சாலைகளுக்கு ஒரு சட்டம் வந்தால் விவசாயிகள் மிகவும் பயனடைவர். மேலும் ஆற்று மணலை எடுப்பதற்கென்று சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தினால் ஏரி நீர் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இன்று தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் விவசாயிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. ராஜஸ்தான் மாநில விவசாயிகளும் இந்தப் பாரதத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயக்கடனுக்கு விலக்கு அளிப்பதாக தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். விலக்கு அளிக்காததால் கோபம் அடைந்த விவசாயிகள் கடந்த 13 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பல திட்டங்கள் புதிதாகக் கொண்டுவரப்படுகிறது.ஆனால் விவசாயிகளுக்கென்று ஒரு சரியான திட்டத்தைக் கொண்டுவர அரசு தாமதிக்கிறது. நம் நாடு விவசாயிகளுக்கான நாடு என்பதெல்லாம் வெறும் பேச்சாகும் காலம் தொலைவில் இல்லை.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top