#manipal technologies:ஏ.டி.எம்மில் கேன்சல் பட்டனை இரு முறை பிரெஸ் செய்துவிட்டு நடந்த இந்த மாற்றத்தினை கவனித்தீர்களா?
  • 14:29PM Jun 06,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 14:29PM Jun 06,2019 Chennai

ATM மெஷினில் இரண்டு முறை கேன்சல் பட்டனை க்ளிக் செய்த பின்னர் மற்றவர்கள் உங்களது ரகசிய பின் நம்பரை திருட முடியாது என்ற தகவல் ஒன்று சோசியல் மீடியாக்களில் வைரலாகிறது.அந்த தகவல், RBI மக்களிடம் கேட்டுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.இவ்வாறு இருமுறை கேன்சல் பட்டனை பிரெஸ் செய்வதால் கஸ்டமரின் ரகசிய பின் நம்பரை மற்றவர்கள் ஹேக் செய்ய முடியாது என கூறப்டுகிறது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர், இப்படி பரப்பப்படும் தகவலில் உண்மைதன்மையை தெளிவுப்படுத்தி இருக்கிறார். இந்த செய்தி RBI மூலம் அனுப்பப்பட்ட தகவல் கிடையாதாம். மெஷினில் பின் நம்பரை என்டர் செய்த பின்னர் பரிமாற்றம் தேவையில்லாத பட்சத்தில் ஒருமுறை கேன்சல் பட்டனை அழுத்தினாலே பரிமாற்றம் ரத்தாகி விடும் என manipal technologies ltd நிறுவன துணை தலைவர் அஸ்வின் ஷெனாய் கூறியுள்ளார்.

இதே போல முன்னதாக இது மாதிரியான செய்தியை அமெரிக்காவை சேர்ந்த வலைதளம் ஒன்று பொய் என நிரூபித்துள்ளது. இதன் உண்மை தன்மையை நிரூபிக்க, படிப்பவர்கள் நம்பும் வகையில் ரிசர்வ் வங்கி சார்பில் அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று எவ்வித மெசேஜ்களையும் இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் கஸ்டமர்களுக்கு அனுப்பபடுவதில்லையாம். இதுபோன்ற குறுந்தகவல்களை குறிப்பிட்ட ATM மெஷின்களை இயக்கும் பேங்குகள் சார்பில் அனுப்பப்படுவது வழக்கமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Top