Exquisite

எத்தனை காலமானாலும் இந்த முட்டாள்களை திருத்த முடியாது போலிருக்கே ! கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?

Apr 05 2021 10:36:00 PM

மாறிவரும் உலகிற்கு ஏற்றாற்போல நம்மையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். பழைய நடைமுறைகளில் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மிச்சத்தை விட்டுத்தள்ள வேண்டும். இந்த நவீன உலகத்திலும் முட்டாள்தனமாக எதை எதையோ நம்பி ஏமாந்து கொண்டிருந்தால் அப்புறம் நாம் எவ்வளவு படித்தாலும் பயனில்லை.

fake-ghost

குவைத்தில் ஒரு வித்தியாசமான ஏமாற்று வேலை அரங்கேறியுள்ளது. அங்கு வாழும் ஒரு பெண் தன் உடம்பில் பேய் இருக்கிறது என்று நண்பர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தன்னுடைய பகுத்தறிவை பயன்படுத்தாமல் நண்பர்கள் பேச்சை கேட்டு பணத்தை பறிகொடுத்து விட்டு இப்போது வருத்தப்படுகிறார். நண்பர்களின் ஆலோசனைப்படி தனது உடலில் உள்ள பேயை விரட்டுவதற்காக ஒரு மந்திரவாதியை அணுகியுள்ளார்.

fake-ghost

அந்தப்பெண் உடலில் இருக்கும் பேயை மந்திரவாதி பல வித்தைகள் செய்து வெளியேற்றினார். இதற்கு கட்டணமாக 30000 தினார்களை வசூல் செய்துள்ளார் மந்திரவாதி. இது இந்திய மதிப்பில் சுமார் 73 லட்சமாகும். பணம் கொடுக்கும் வரை மந்திரவாதியின் கட்டுப்பாட்டில் மயங்கி இருந்த அந்தப்பெண் தன்னிடம் இருந்த பணம் பறிபோன பிறகு தான் மந்திரம் தந்திரம் என்ற பெயரில் தன்னிடம் பணம் பறித்துள்ளனர் என்பதை புரிந்து கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பணத்தை இழக்கும் வரை இது மூட நம்பிக்கை என்பது அவருக்கு தெரியவில்லை. இப்போது தான் ஞானோதயம் பிறந்திருக்கிறது. இனிமேலாவது கொஞ்சம் தெளிவாக இருங்கள் மக்களே.