தோக் லாம் – இந்திய சீனா யுத்தம் வருமா???
  • 09:50AM Sep 12,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 09:50AM Sep 12,2017 Chennai, Tamil Nadu 600003, India

இந்திய சீன எல்லையில் போர் பதற்றம் என இரு நாட்டு மக்களும் பதறிக் கொண்டிருக்கையில், மிகவும் அமைதியாக இருக்கிறது இரு நாட்டு அரசாங்கங்களும்.  தீவிரவாத தாக்குதல்கள் காஷ்மீர் எல்லையில் அதிகரிக்க, சீன அரசின் ஆக்கிரமிப்பு ஒரு போர் பிரகடனமாகக் கருதப்படுவதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால், உண்மை நிலை என்னவோ தலைகீழாகத்தான் உள்ளது.

சீனா ஒருபுறம் வெட்டிப்புடுவேன், குத்திபுடுவேன் ரீதியில் பயம் காட்டிக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அதே தோணியில் அமெரிக்காவுடனும், “வர்த்தக தொடர்பை விலக்கிக் கொண்டால், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” எனவும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.  அமெரிக்கா அமைதியாக வேடிக்கை பார்க்க, சீனா தன்னுடைய பயத்தை இராஜதந்திரம் என்ற பெயரில் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறது.

மற்றுமொரு காரணம். PoK வழியாகச் செல்லும் ஒரு சாலை.  China’s Belt Road Initiative (BRI) அல்லது நமக்குப் புரியும் வகையில் சொன்னால், சில்க் ரோடு.  சீனப் பொருட்களை இந்தியா தாண்டி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மற்றும் ஆசிய கண்டத்தின் இந்தப் பக்கத்திற்கு விற்க, சீனாவின் சுலபமான வழி. இது மட்டுமல்ல, கடல் வழி வாணிபம் மூலம் இந்தப் பிராந்தியங்களுக்கு கொண்டு செல்ல இந்தியா, இலங்கை இரண்டையும் சுத்தி போக வேண்டி இருக்கும். இந்தச் சாலை அதற்கு முடிவுகட்டும்.  Pok வழியாக பாகிஸ்தான் துறைமுகத்திற்குப் பொருட்களை கொண்டு வர முடியும்.  சீனா இலங்கை, பாகிஸ்தானை ஆதரிப்பதும், அவர்களுக்காக இப்போது நம்மை நேரடியாக எதிர்ப்பதும், இன்னமும் சண்டை போடாமல் இருப்பது என அனைத்திற்கும் காரணம் இதுதான்.  நம் தரப்பில். காஷ்மீர் கலவரங்கள், பாகிஸ்தான் தாக்குதல்கள் போன்ற சம்பவங்களுக்கும் இந்த ஒற்றைச் சாலைதான் காரணம். சீனாவுக்கு இந்த சாலை தேவை. பாகிஸ்தானுக்கோ சுங்க வரி மூலம் கிடைக்கும் வருமானம் தேவை. 

சில்க் சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த சீனா தீவிரமாக, இந்தியா இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதால் மட்டுமே இந்தப் போர் மிரட்டலே ஒழிய உண்மையில் போருக்காக இல்லை. இது வெறும் பேருக்கான போர் மட்டுமே. பயப்பட வேண்டியதில்லை…

தற்போது சீனாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் அதிபர் Xi Jinping, தன்னை ஒரு மாவீரனாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் ஏற்கெனவே மக்கள் எதிர்ப்பை நிறையவே சம்பாதித்து உள்ளார்.  இதில் இந்தியாவிடம் போர் என்பது மக்கள் இரசிக்கும்படியான விஷயமாக இல்லை.  இதன் காரணமாக தொலைக்காட்சிகளில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன (இது அவரின் குணாதிசயம் – வேறு யாரையேனும் நினைவுபடுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல…).  இருப்பினும், மக்கள் இன்னும் கொந்தளிப்புடன் இருக்கின்றார்கள்… போர் மூண்டால் உள்நாட்டுக் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளதால், கூடுமானவரை வாயிலேயே வடை சுடுவது என சீனா முடிவெடுத்து விட்டது. 

இருப்பினும், இன்னும் ஏன் படைகள் அங்கேயே நிற்கிறது என்று கேட்டால், இரு நாடுகளுமே யார் முதலில் பின்வாங்குவது என்ற ஈகோவால் மட்டுமே அங்கே நின்று கொண்டிருக்கிறது.  பயந்து பின்வாங்குவது போலத் தோற்றம் இல்லாமல் எப்படி விலகுவது என்ற சாதாரண கேள்விதான் அது.  சீனா - இந்தியா அழைக்கும் எந்த முடிவு எட்டும் பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை, வரவும் போவதில்லை. யாராவது தலையிட்டு முடிவுக்குக் கொண்டு வரும் வரையில் அங்கு வீணாகப் போவது நமது வரிப்பணம் மட்டுமே…)

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top