#ModiXiSummit சீன அதிபர் வருகையைத் தொடர்ந்து சென்னையில் நடக்கும் தடாலடி விஷயங்கள்!
  • 19:43PM Oct 11,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 19:43PM Oct 11,2019 Chennai

பொதுவாக ஒரு இடத்தில் உள்ளூர் தலைவர்கள் சந்திப்பு நடந்தாலே அந்த இடத்திற்கு ஏகப்பட்ட பாதுகாப்புகள் போடப்பட்டுச் சாலை எங்கும் அலங்காரங்கள் செய்யப்பட்டு அந்த ஏரியாவே ஜொலிக்கும். இந்நிலையில் இன்று மாமல்லபுரத்தில் சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் சந்திப்பு நடைபெறுவதால் நேற்றில் இருந்து நாளை மறுநாள் வரை சென்னையைச் சுற்றி ஏகப்பட்ட பாதுகாப்புகள் குவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வெள்ளத்தின் போது கூட இந்தப் பக்கம் எட்டி பார்க்காத வடநாட்டு ஊடகங்கள் தற்போது சென்னையில் தான் குடிகொண்டுள்ளனர். சீன அதிபர் வருகையைத் தொடர்ந்து சென்னையில் நடக்கும் சில தடாலடி விஷயங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.

#1 சீன அதிபரின் வருகையால் கிண்டி, ஓஎம்ர், மத்திய கைலாஷ், ஈசியார் போன்ற முக்கியச் சாலைகள் நாளை வரை வழிமாற்றபட்டுள்ளது.
#2 இதுவரை எலக்சன் நேரத்தில் மட்டுமே மாமல்லபுரத்தை சுற்றியுள்ள சாலைகள் மட்டும் பகுதிகள் சீர் அமைக்கப்படும். ஆனால் தற்போது சீன அதிபர் வருகையின் காரணமாக மாமல்லபுரம் சுற்றிய அனைத்து பகுதிகளும் சீர் அமைக்கப்பட்டுள்ளது.
#3 முன்பு மாமல்லபுரத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளப் பலமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது, இருந்தும் முற்றிலும் சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை. ஆனால் இன்று சீன அதிபரின் வருகையால் இரண்டே நாளில் முழு மாமல்லபுரம் பகுதியும் சுத்திகரிக்கப்பட்டு, அனைத்து இடத்திலும் விளக்குகள் அமைக்கப்பட்டு ஒரே ஜெகஜோதியாக உள்ளது!
#4 கடந்த ஆண்டில் இருந்தே பிரதமர் தமிழகம் பக்கம் வந்தாலே போராட்டம் நடைபெறும். அந்த வகையில் ட்விட்டர் தளத்தில், #泰米尔纳德邦欢迎习近平 #TN_welcomes_XiJinping #回到莫 #GoBackModi போன்ற ஹேஸ்டேக்கள் ட்ரெண்டாகி வருகின்றன. அதேபோல 5 திபெத்திய மாணவர்கள் சென்னை விமானநிலையத்திற்கு எதிரில் சீன அதிபருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
#5 இதுவரை தேர்தல் பிரச்சாரத்திற்குக் கூட வேஷ்டி அணிந்து தமிழகம் வராத பிரதமர் மோடி, இன்று சீன பிரதமரை சந்திக்கத் தமிழகப் பாரம்பரியத்தில் வேஷ்டி அணிந்து வந்துள்ளார்.
#6 இதுவரை சென்னை பக்கம் எட்டிப்பார்க்காத தேசிய செய்தி சேனல்கள் கூட இன்று சென்னை மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் சுற்றி வருகின்றனர்.

#ModiXiSummit இன்று ஒருநாள் மட்டும் இந்த இரு நாட்டு தலைவர்களின் வரலாற்று சந்திப்பால் ஏகப்பட்ட விஷயங்கள் தமிழகத்தில் அரங்கேறிவருகிறது. இதில் நாளைய தினம் என்ன நடக்கப்போகிறது என்று காத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top