RESERVATION: மத்திய அரசின் புதிய கண்துடைப்பு அறிவிப்பு!!! பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு!!!
  • 18:16PM Jan 08,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:16PM Jan 08,2019 Chennai

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில், இன்று ஆளும் பாஜக தரப்பில் பொதுப் பிரிவினரில் பொருளதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், மக்களவையில் இன்று சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பார்க்கும் பலரும் இது வெறும் கண்துடைப்புதான் என்றும், தேர்தலுக்கான பாஜகவின் யுக்தி என்றும் குற்றம் சாட்டி வருகிறார்கள். முதல் காரணம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதைச் செய்ய வழியே கிடையாது. அப்படிச் செய்ய வேண்டுமானால், அது ஒரு நீண்ட PROCESS. இப்போதுதான் பாஜக இதற்கு சட்ட மசோதாவே, அதாவது முதல் படியையே தாக்கல் செய்திருக்கிறது.

இரண்டாவது இதைத் தாக்கல் செய்யும் போது நிச்சயம் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். உடனடியாக நிறைவேற்ற முடியாது. குறைந்தபட்சம் தேர்தல் வரும்வரையாவது. அப்போது அவர்களுக்குப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மீது அக்கறையில்லை என்று பிரச்சாரம் செய்து ஓட்டைப் பிரிப்பதற்கான சூழ்ச்சியும் கூட. மூன்றாவது முக்கியமான விஷயம், தேர்தலுக்கு இன்னும் நான்கே மாதங்கள் இருக்கும் நேரத்தில்தான் இவர்களுக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே ஞாபகம் வந்திருக்கிறது. இந்த முறையும் ஜெயித்தால், மறுபடி இந்த மசோதா அடுத்த ஆட்சிக்காலத்தில் நாலே முக்கால் வருடங்களுக்குப் பிறகு, இப்போது ராமர் கோவில் நினைவுக்கு வரும் நேரத்தில்தான் மீண்டும் நினைவுக்கே வரும். ஆக, இது தேர்தலுக்கான அக்கறையே ஒழிய, பொதுப் பிரிவில் உள்ளவர்கள் மீதான அக்கறையில்லை. அப்படி இருந்தால், இந்த இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வந்த உடனேயே நிறைவேற்றி இருப்பார்கள்.

இப்போது இந்த சட்ட மசோதா, எதிர்க்கட்சியின் கேள்வி பதில்கள், எதிர்ப்பு, நாடாளுமன்ற நிகழ்வு போன்ற அனைத்தும் கடந்து நிஜமான சட்ட திருத்தம் ஆகியவை எல்லாம் விரைந்து நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் தேர்தல் வரைக்கும் ரொம்பவும் குறைவு. இந்தச் சட்டம் வர வேண்டுமென்றால் எங்களுக்கு மீண்டும் வாக்களித்தால்தான் வரும் என்ற ரீதியில் இதை ஆயுதமாகப் பயன்படுத்த பாஜக முடிவு செய்துவிட்டது. அது மட்டுமல்ல பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என்ற முறையில் பயன் பெறத் தகுதி என்ற நிர்ணயித்த வரையறைகள் கிட்டத்தட்ட கேஸ் மாணியத்தை 90% மக்கள் பெற இயலாதபடி இருப்பதையும் கவனிக்கவும். ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் உள்ளவர்கள், 1000 சதுர அடிக்கு குறைவாக சொந்த வீடு உள்ளவர்கள் பொதுப் பிரிவினராக இருந்தாலும் 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றவர்கள் எனக் கூறப்படுகிறது. அதே போல், அறிவிக்கப்பட்ட நகராட்சிகளில் 100 சதுர அடிக்கு குறைவான வீட்டு மனை கொண்டவர்கள், அறிவிக்கப்படாத நகராட்சிகளில் 200 சதுர அடிக்கு குறைவான வீட்டுமனை கொண்டவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை பெற தகுதி பெற்றவர்கள் எனக் கூறப்படும் நிலையில், மக்களவையில் மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த முறையில் எத்தனை பேர் தகுதியானவர்களாக இருக்கப் போகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதனால்தான் இதனை ஒரு கண்துடைப்பு அறிவிப்பு என்று சொல்ல வருகிறோம். இன்னும் மசோதா பற்றிய விரிவான தகவல்கள் வெளிவரும் போது, இது எத்தகையது என்பதை நீங்களும் புரிந்து கொள்ளத்தான் போகிறீர்கள். அதுவரை, பொறுத்திருந்துதான் பார்ப்போமே!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top