இலெமூரியா கண்டம் – ஒரு பார்வை...
  • 06:47AM Sep 13,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 06:47AM Sep 13,2017 Chennai, Tamil Nadu 600003, India

உலகெங்கும் அட்லாண்டிஸ் என்ற ஒரு மேம்பட்ட நாகரீகத்தைப் பற்றிய கதைகள் பரவலாக பேசப்பட்டு வந்தாலும், உண்மையில் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் அந்த மேம்பட்ட சமூகத்தின் இருப்பிடம் மறைந்த இலெமூரியாதான் என்று தமிழ் அறிஞர்களால் கருதப்படுகிறது.  சிறிது காலம் முன்பு வரை, இலெமூரியாவை வெறும் கட்டுக்கதை எனப் பிற நாடுகள் நம்ப வைக்க முயற்சி செய்தும், இப்போது அவ்வாறான ஒரு கண்டத்தின் மிச்சமே தற்போதைய இந்தியா, இலங்கை, மடகாஸ்கர் போன்ற நாடுகள் என்பதை மெதுவாக ஒப்புக் கொண்டாலும், (கீழே உள்ள உலக மேப்பில் சிவப்பாகக் குறிக்கப்பட்ட பகுதி) இலெமூரியா என்பதை மட்டும் குறிப்பிடத் தயங்குகின்றனர்.

1864 ல் பிலிப் ஸ்க்லட்டர் என்ற ஆராய்ச்சியாளர், மடகாஸ்கரின் பாலூட்டிகள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், இலெமூர் என்ற பாலூட்டி இனத்தின் புதை படிவங்கள் மடகாஸ்கர் மற்றும் இந்தியா ஆகியவற்றில் மட்டும் கிடைத்திருப்பதாகவும், இதன் மூலம் மடகாஸ்கரையும், இந்தியாவும் இணைக்கும் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்திருக்கலாம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.  ஆச்சரியப்படும் விதமாக ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அப்படி ஒரு இனம் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லை என்பதையும் சொல்லியிருக்கிறார்.  இவரைத் தொடர்ந்து, சிலர் அந்த நிலப்பரப்பை பெயர் குறிப்பிடாமல் விளக்கினாலும், மெல்காய்ர் நியூமேய்ர் என்பவர் 1887-ல் எழுதிய புத்தகத்தில், 19 நூற்றாண்டில் இருந்திருக்கக் கூடிய கண்டங்களைப் பற்றி, “Distribution of Species” என்ற அடிப்படையில் எழுதியிருந்தார். (Distribution of Species – அதாவது விலங்குகளின் வகைகளை வைத்தும், அவை பரவியிருக்கும் நாடுகளை வைத்தும், எங்கிருந்து எப்படி இடம் பெயர்ந்திருக்கும் என்பதை வைத்து பழைய நிலப்பரப்புகளைப் பற்றி ஆராய்வது. யானைகள் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, இந்தியா - இங்கு மட்டும் ஏன் இருக்கன்றன போன்ற விஷயங்கள்.)

அதன் பிறகே பல்வேறு அறிவியலாளர்கள், இலெமூரியா பற்றி விரிவாகப் பேச ஆரம்பித்தனர். எர்னஸ்ட் ஹேக்கல் என்பவர் இலெமூரியா என்பது புகோள ரீதியாகவும், உயிரியல் ரீதியாகவும் மறைந்த பல்வேறு தொடர்புகளின் – missing links – ஒரே லாஜிக்கல் விளக்கமாக இருக்கக்கூடும் என அறிவித்தார்.  இந்தக் காலகட்டத்தில் Tectonic Plate மற்றும் Continental Drift ஆகியவை பற்றிய அறிவின் காரணமாக சிறிது காலம் இலெமூரியா பற்றிய வாதங்கள் அடிபட்டுப் போயின.  அதன்படி மடகாஸ்கர் மற்றும் இந்தியா ஒரே நிலப்பரப்பு எனவும், அவை உடைந்து மிதந்துதான் இவ்வளவு தூரம் பிரிந்து போனதாக முடிவுக்கு வந்தனர்.

1999-ல் ஜேய்ட்ஸ் ரிசொல்யூஷன் என்ற ஆராய்ச்சிக் கப்பல் இந்தியப் பெருங்கடலுக்கடியில் ஒரு பரந்த நிலப்பரப்பு மூழ்கியிருந்ததைக் கண்டுபிடித்தது.  இந்த நிலப்பரப்பு ஆஸ்திரேலியாவில் ஆரம்பித்து மடகாஸ்கர் வரை இருப்பதும் தெரிய வந்தது.  இதில் எடுக்கப்பட்ட பல மாதிரிப் படிமன்கள் 90 பில்லியன் ஆண்டுகள் வரை பழமையானதாக இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்தில் பைபைள் அச்சகத்திலேயே அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட திருக்குறள் ஆங்கிலப் பதிப்பான Golden Bible-ல், இலெமூரியா கண்டத்தினைப் பற்றிய கையால் வரையப்பட்ட வரைபடம், ரோம் சர்ச்சில் - போப்பாண்டவர் பாதுகாப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நமது சங்க இலக்கியங்களின் மூலம் - கபாடபுரம், மேரு மலை, மதுரை, பஃறுளியாறு எனவெல்லாம் அந்தக் கண்டத்தைப் பற்றிய குறிப்புகள் மட்டுமல்ல, அவற்றின் நிகழ்விடமாகவும் அவற்றைக் கொண்டிருப்பதை நாம் காணலாம்.  இலெமூரியாவில் உள்ள மேரு மலையின் உச்சியே தற்போதைய இலங்கையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  மறைந்த அந்தக் கண்டத்தின் இரகசியங்கள் வெளியே வந்தால், உண்மையாக நாம் பெருமை கொள்ளத்தக்க பல்வேறு விஷயங்களும் வெளிவரக் கூடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை…

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top