உடை அரசியல்…
  • 14:00PM Oct 27,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:00PM Oct 27,2017 Chennai, Tamil Nadu 600003, India

மக்கள் அரசியல், தலைவர்கள் அரசியல், இலவச அரசியல் இவையெல்லாம் தாண்டி வீட்டுக்குள் நடக்கும் அரசியல் வரைக்கும் நாம் பார்த்திருக்கிறோம்.  ஆனால், உடையரசியல் என்று கேள்விப்பட்டதுண்டா??? அப்படி என்றால் என்ன??? அதனைச் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறார்களா அல்லது புரிய வைக்கப்பட்டிருக்கிறார்களா என்ற கேள்விகளுக்கெல்லாம் முடிந்த அளவு இந்தக் கட்டுரையில் விடை கிடைக்கும் என நம்புகிறேன். 

பெரும்பாலும் தலித் இலக்கியம் படிப்பவர்களுக்கும். தலித் தலைவர்களும் அதிகமாக அம்பேத்கரின் பெருமை எனப் பறைசாற்ற கூறிவரும் ஒரு விஷயமே உடையரசியல். அதிலும் சிலரது பேச்சுக்கள் அவர்களுக்கு உடையரசியல் பற்றி தவறான போதனைகளே சொல்லிக் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இணையத்தில் ஒரு குழு அம்பேத்கர் கோட் அணிந்த காரணத்தாலேயே காந்தி அரைக்கால் வேட்டி, துண்டுக்கு மாறினார், பண்ணையார்களும், பெரிய மனிதர்களும் ஷெர்வாணிக்கு மாறினர் என்று கபாலி என்ற திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு மும்முரமாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.  நிஜமா என்ன???

முதலில் அம்பேத்கர் அவர்கள் பிறந்தது 1891, ஏப்ரல் 14.  அவர் அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகத்திற்கு 1913ல் படிக்கச் செல்லும் போதே கோட் போட ஆரம்பித்துவிட்டார் என்பது உண்மை.  1917ல் அவர் இந்தியா திரும்பிய போதும், 1921ல் மீண்டும் இலண்டனில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு தீஸிஸ் படிக்கச் சென்றுவிட்டார். இதற்கு இடையில், அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1919 இயற்றிக் கொண்டிருந்த சௌத்பரோ கமிட்டியின் முன் அவரது கருத்தை முன்வைக்க அழைக்கப்பட்டார்.  அப்பொழுது அவர் தலித் மற்றும் சிறுபாண்மையினத்தாருக்கான தனி அரசியல் தீர்வை, ஒதுக்கீடு போன்றவை குறித்து ஆணித்தரமாக வாதாடினார். அவரது பரிந்துரைகள் பல சட்டமாகின.  1920ல் முங்நாயக் என்ற பத்திரிகையை தன் நண்பர் சகு அவருடன் இணைந்து துவங்கியவர் மீண்டும் 1921க்கு இலண்டன் சென்று 1923க்கு பிறகே இந்தியாவுக்குத் திரும்பினார்.

சரி. இப்பொது காந்திக்கு வருவோம்.  அம்பேத்கர் கோட் அணிந்த முதல் நிகழ்வில் காந்தி லண்டனிலும், அம்பேத்கர் அமெரிக்காவிலும் இருந்தனர். அடுத்து, காந்தி தன் உடையை மாற்றிய 1921ம் ஆண்டு காந்தி மட்டும்தான் இந்தியாவில் இருந்தார், அம்பேத்கர் இல்லை. சரி, ஒரே ஆண்டு என்ற வாதத்திற்கு வைத்துக் கொண்டால் கூட 1919-ல் அம்பேத்கர் இந்திய அரசியல் சீர்திருத்தப் பரிந்துரைகள் செய்தது அப்போது பாரிஸ்டராக இருந்த காந்திக்கு தெரிந்திருக்காதா என்ன??? இதற்கே மூன்றாண்டுகளாக முடிவெடுத்துக் கொண்டிருந்திருந்தால் அவர் இப்போது தேசத்தந்தை அல்ல, தேசத்தின் கடைக்கோடி தமையன் கூட ஆகியிருந்திருக்க முடியாது.  காந்தியின் வரலாற்றை விடுங்கள், அம்பேத்கரின் வரலாறு தலித்களிடம் இப்படித்தான் பரப்பப் பட்டிருக்கிறதா என்பதே ஒரு பெரிய கேள்வி.

 

இரண்டாவது ஆண்டைகளும், ஜமீன்தார்களும்… ஷெர்வானி என்ற உடை இந்தியாவுக்குள் வந்த காலம் என்ன தெரியுமா??? கி.பி. 1526.  மொகலாயர்கள் வந்த போதே இந்த உடையும், அரபுக் கால்சராய் என்ற பெயரில் உள்ளே வந்துவிட்டது.  அதன்பிறகு 370 ஆண்டுகள் கழித்து வந்த அம்பேத்கர் இதை அணியக் காரணமாக இருந்தார் என்று சொல்வது மிகவும் அபத்தமான ஒன்று. இது அவரது மரியாதையையும் சேர்த்துக் களங்கப்படுத்திவிடும்.  நீங்கள் நம்பிக் கொண்டிருந்த காரணங்கள் உடையரசியல் இல்லை என்று தெரிந்து விட்டது. ஒருவேளை கபாலி படத்தில் சொல்லியிருப்பது போல, “உனக்குப் பிடிக்கலைன்னா நான் போடுவண்டா, திரும்பத் திரும்பப் போடுவண்டா…“ என்று சொல்வதுதான் உடையரசியல் என்றால், அப்படிச் சொல்பவர்களிடமிருந்து உடனடியாக விலகி விடுங்கள்.  ஏனெனில், ஒருவனுக்குப் பிடிக்கிறது என்ற காரணத்திற்காக ஒரு உடையை அணிவது எப்படி அடிமைத்தனத்தின் அபத்தமோ, அதே போலத்தான் ஒருவனுக்கு பிடிக்கவில்லையென்று உடையணிவதும் அடிமைத்தனத்தின் அபத்தமே… அப்படிச் சொல்பவர்களால் நீங்கள் ஒரு தலித் ஆண்டையிடம் வாக்கப்படுவீர்களே ஒழிய மேல்தட்டு அம்பேத்கரிடம் அல்ல.

எத்தனைத் தடைகள் வந்தாலும், எதிர்ப்பு வந்தாலும், உயிரே போனாலும், எனக்குப் பிடித்ததை நான் செய்வேன், பிடித்ததை அணிவேன் என்று அணிந்தார் அம்பேத்கர். அவர் சொன்னதும், செய்ததும் மட்டுமே உண்மையான உடையரசியல்…   

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top