#FACEBOOK: 78 லட்சம் பதிவுகள்!!! 30 லட்சம் FAKE ID-க்கள் நீக்கியது FACEBOOK!!!
  • 21:52PM May 25,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 21:52PM May 25,2019 Chennai

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் SOCIAL WEBSITE – “FACEBOOK”. இதில் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக, சமீபகாலமாகத் தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. அதே போல். FACEBOOK-ல் FAKE ID-களை உருவாக்கி தேவையற்ற மற்றும் பொய்யான செய்திகளைப் பரப்புவதும் வாடிக்கையாகி வருகிறது. இதில் பெரும்பாலும் FAKE NEWS-களைப் பதிவேற்றம் செய்து, மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது, FACEBBOOK-ல் FAKE ID-களை உருவாக்குவோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 30 லட்சம் FAKE ID-கள் உருவாக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய 6 மாதங்களில் நீக்கப்பட்ட FAKE ACCOUNT-களை விட 2 மடங்கு அதிகம் ஆகும். எனினும் தொடர்ச்சியாக லட்சக்கணக்கான FAKE ACCOUNT-கள் உருவாக்கப்படுவதால் அவற்றைக் கண்டறிந்து, நீக்க முடியாத நிலை உள்ளது.

கடந்த 6 மாதங்களில் வெறுப்புணர்வைப் பரப்பும் வகையிலும், விதிமுறைகளை மீறும் வகையிலும் இருந்த 73 லட்சம் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய 6 மாதங்களில் நீக்கப்பட்ட பதிவுகளை விட 54 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது”. என்ன ஒன்று பொத்தாம் பொதுவா சொல்லாம எந்த நாட்டிலிருந்துன்னு சொல்லியிருந்தா இன்னும் வசதியா இருந்திருக்கும்!!!

Facebook Kills  |  Detecting Hidden Cameras  |  Selfie Craze  |  Chip Based Card  |  MSME Loans  |  

Top