#FaceBook : கேரள மாணவருக்கு பேஸ்புக் அளித்த கௌரவம் !!!
  • 08:20AM Jun 05,2019 Kerala
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 08:20AM Jun 05,2019 Kerala

இன்றைய நவீன உலகில் வாட்ஸ்அப்  பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது  வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் செயலி பேஸ்புக்கிற்குச் சொந்தமானதாகும். உலக அளவில் அந்த நிறுவனம் வாட்ஸ்அப் உள்ளிட்ட தங்களது செயலிகளில் காணப்படும் பாதுகாப்புக் குறைபாடுகள் எனப்படும் `பக்'கைக் (Bug) கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதுடன் கௌரவித்தும் வருகிறது.

bug.jpg

வாட்ஸ்அப் செயலியில், பயனருக்கே தெரியாமல் அவரது கணக்கில் பதியப்பட்டிருக்கும் ஃபைல்களை முழுவதுமாக மற்றவர்கள் அழிக்க வழிவகை செய்யும் வகையில் ஒரு பக் உள்ளதை   கேரளாவைச் சேர்ந்த கே.எஸ்.அனந்தகிருஷ்ணா என்ற 19 வயது பொறியியல் மாணவர் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார். இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்துக்குத் தகவல் கொடுத்த அவர் அந்தக் குறைபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்

bug1.jpg

அனந்த கிருஷ்ணா கூறிய புகாரை  கடந்த 2 மாதங்களாக ஆய்வு செய்த பேஸ்புக் நிறுவனம் அந்தக் குறைபாட்டை சரிசெய்தது, மேலும் அதைக் கண்டுபிடித்த கூறிய  அனந்தகிருஷ்ணாவை கௌரவப்படுத்த முடிவு செய்தது. அதன்படி, ஊக்கத்தொகையாக அவருக்கு 500 அமெரிக்க டாலர்கள் அளித்ததுடன் பேஸ்புக்கின் Hall Of Fame பட்டியலில் இணைத்தும் அவரைக் கௌரவப்படுத்தியிருக்கிறது

மேலும் பேஸ்புக் நிறுவனம் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள பட்டியலில் அனந்தகிருஷ்ணாவின் பெயர் 80வது இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. தங்களது செயலிகளில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதுடன்  பேஸ்புக் Hall Of Fame பட்டியலிலும் அவர்களுக்கு இடம் அளித்து பேஸ்புக் நிறுவனம் கௌரவித்து வருவது குறிப்பிடத்தக்கது . 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top