ஆச்சிர்யமூட்டும் கற்கோவில்..
  • 13:09PM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 13:09PM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India

கைலாசநாதர் திருக்கோவில் எல்லோராக்குகை கோவில்களுள் ஒன்று.கட்டிடக்கலையில் இந்தியர்களின் திறனை எடுத்துரைக்கும் வகையில் இக்கோவில் அமைந்துள்ளது.திராவிட கலைப்பாணிக்குரிய பண்புகளையும், இராஷ்டிரகூட கலைப்பாணியின் அம்சங்களையும் ஒருங்கே அமைந்தாற்போல் இருப்பது இதன் சிறப்பு. மாமல்லபுரத்து மலைத்தளிகளை  போலின்றி முழுமையான ஆலயமொன்றின் அம்சங்களைக் கொண்ட பிரம்மாண்டமான  மலைத்தளியாக விளங்குகின்றது.

Image Credit

இக்கோவிலின் மற்றொரு சிறப்பு, ஒரே கல்லால் கட்டப்பட்டது என்பது தான்.இக்கோவிலை உருவாக்கப் பலநூறு ஆண்டுகளாக, கிட்டத்தட்ட 400,000 டன் எடையுள்ள பாறைகள் குடைந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Image result for kailash temple

சிவனின் இருப்பிடமான கைலாசத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.250அடி நீளமும் 150அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயம் 148அடி நீளமும் 62அடி அகலமும் 100அடி உயரமும் உடையது. சைவ மரபிலமைந்த பௌராணிக கதைச்சிற்பங்களை கொண்டுள்ளது.

Image result for kailash temple

இன்றுள்ள தொழில்நுட்பத்தை கொண்டு இத்தகைய கோவிலை கட்டுவது என்பது நம்பமுடியாத ஒரு காரியமாக இருக்கும் நிலையில் இதை எவ்வாறு செய்துமுடித்தனர் என்பது அனைவருக்கும் ஆசிரியத்தில் இத்தலத்தைக் காண வருகின்றனர்.பல சந்தேகங்கள் மற்றும் ஆச்சரியங்கள் இருந்த போதும் இவை அனைத்தையும் தாண்டி கைலாசநாதர் நமக்குக் காட்சியளிக்கின்றார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top