முரட்டுப் பீசு…
  • 06:35AM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 06:35AM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India

சின்ன வயசில இருந்தே அடுத்தவனை மிரட்டிப் பழகிட்டோம்னா, அதை விட்டுட்டு அவ்வளவு சீக்கிரம் வர முடியாது.  அதுவும் நாம ஒன் சைடா லவ் பண்ற பொண்ணு எதிரே இருந்தா கேட்கவே வேண்டாம். என்னவோ நாம சூப்பர் ஹீரோ மாதிரியும், எதிரே இருக்கிறவன் எல்லாம் சாதாரன மனுஷன் போலயும் ஒரு திமிரு வரும் பாருங்க… அதான்… அந்தக் கொடுமையைத்தான் இங்க எழுதப் போறேன்.

சொந்தமா கடை வச்சிருக்கிற நான், காசுக்கு எப்பவும் யாரையும் எதிர்பார்க்க வேண்டி இல்லாத காரணத்தாலயே கொஞ்சம் கெத்து காட்டி முரட்டுத்தனமாத்தான் இருந்தேன்.  ஊரு கோவில் திருவிழால வருஷம் பூரா வம்பிழுத்தவனுக்கெல்லாம் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் குடுக்கிறதுக்காகவே கேங்க் சேர்ந்து சுத்துவோம்.  அன்னைக்கு மாட்டுறவன் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், மூத்திர சந்துக்குள்ள மூஞ்சில துணியைக் கவுத்துப் போட்டு அடிதான்.  இப்படி இருந்த எனக்கு டெய்லி ஸ்கூல் விட்டு, என் கடை வழியா நடந்து போற ஒரு முஸ்லிம் பொண்ணு மேல கண்ணு விழுந்துச்சு.  நல்ல அழகா ஸ்கூல் யூனிபார்ம்ல பார்க்கிறதுக்கே அப்படி இருப்பா…

கடை வாசல்ல அவளைப் பார்க்க டெய்லி நிற்க ஆரம்பிச்சு, கொஞ்ச நாள்ல அவளும் கவனிக்க ஆரம்பிச்சு – ஒரு நார்மல் ஒன் சைடு லவ்ல என்னவெல்லாம் நடக்குமோ அதெல்லாம் நல்லா போயிட்டிருந்துச்சு.  ஒரு நாள் சரி அவகிட்ட லவ் சொல்லிடலாம்னு முடிவு பண்ணிப் போனா, அங்கதான் நம்ம தைரியம் என்னன்னு புரிஞ்சுது.  பேச முடியாம பயந்து போய் ஜகா வாங்கிட்டேன்.  அடுத்த நாளில் இருந்து கூட ஒரு சின்ன பையனும் வர ஆரம்பிச்சான்.  எனக்கு காரணம் புரியலை, இருந்தாலும் என்னை பயமுறுத்த ஆம்பிளைத் துணையா அவன் வந்திருக்கான்னு நினைச்சு செம காண்டாய்ட்டேன்.

அடுத்த நாள் எந்தப் பிரச்சினை வந்தாலும் பார்த்துக்கலாம்னு போய் நின்னேன்.  அவ வந்தா… கூட வந்த பொண்ணையும், பையனையும் முறைச்சு ஓரங்கட்டிட்டு, அவகிட்ட வந்து சட்டைப் பாக்கெட்டுல இருந்து லெட்டர் எடுத்துக் கொடுக்கிறதுக்குள்ள ஒரு பெரிய ஆள் பைக்ல கிட்ட வந்து நின்னான்.  அந்தப் பொண்ணு தலை குனிஞ்சு நிக்குது.  கூட வந்த ரெண்டும் தலைதெறிக்க ஓடிட்டாங்க.  நான் நிதானமாத் திரும்பி அந்த ஆளைப் பார்த்து, “ஏய்யா, பார்க்க பெரிய மனுஷனாட்டம் இருக்கே… லவ் லெட்டர் குடுக்கப் போற சமயமா இப்படித்தான் இடைஞ்சல் பண்ணுவியா? மரியாதையா போயிடு…” ன்னு கொடூரமா ஒரு ரியாக்‌ஷன் குடுத்து கையை ஓங்க, அந்தாளு அந்தப் புள்ளையை ஒருவாட்டி பார்த்தான், பின்ன மறுபடி என்னை ஒருவாட்டிப் பார்த்தான்.  பைக்கை கொண்டு போய் கொஞ்ச தூரம் தள்ளி நிறுத்திட்டான்.

நான் லெட்டர் குடுக்கறேன், அந்தப் பொண்ணு அந்தாளை திரும்பப் பார்த்துட்டு, இதுக்கு மேல வாய்ப்பேயில்லை ன்னு சொல்லிட்டு போகுது. என்னடா வம்புன்னு ஏன்டின்னு சத்தமா கேட்டா, அவ சொல்றா – “இது எங்க வாப்பா…” ன்னு… அன்னிக்கு அப்புறம் அந்தப் பொண்ணு ஸ்கூலுக்கு வரலை.  வேற வழியில்லாம ஒரு வாரம் கழிச்சு அந்தாளை அங்கேயே வச்சு மடக்கி, இனி பொண்ணு பின்னாடி வரமாட்டேன்னு சத்தியம் பண்ணி ஸ்கூலுக்கு அனுப்ப சொன்னேன்.  அதுக்கப்புறம்தான் திரும்பப் படிக்கவே அனுப்பினாங்க… ஏதோ என்னால முடிஞ்சது அவ்ளோதான்… என்ன நான் சொல்றது???   

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top