#weddingfun:திருமணமான புதிதில் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் சின்ன சின்ன விஷயங்கள் ? ஆண்களால் பூர்த்தி செய்ய முடியாமல் போக காரணம் ?
  • 13:24PM Jun 08,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 13:24PM Jun 08,2019 Chennai

திருமணமான ஆரம்ப காலம் புதுமண தம்பதிகளுக்கு மறக்க முடியாத நினைவுகளை வழங்க கூடியவை, அப்போது அவர்களுக்குள் இருக்கும் இணக்கமும் காதலும் தான் வாழ்க்கை முழுக்க புரிதலுடன் வாழும் சூழலை உருவாக்கி கொடுக்கும். அப்படி திருமணமான புதுப்பெண் தன் கணவரிடம் எதிர்பார்க்கும் சின்ன சின்ன விஷயங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

#1. மனைவி முதன் முதலாக சமைக்கும் போது, அவளுக்கு எடுபிடியாக இருப்பது. சமைத்ததை ருசி பார்க்க மட்டுமில்லாமல், சமைக்கும் அந்த ப்ராசஸ் முடியும் வரை கூடவே இருந்தால்,அவர்களுக்கு நம்பிக்கை கலந்த மனோபலம் வந்துவிடும்.

#2. பெண்கள் செய்யும் சின்ன சின்ன ஒப்பனைகளை ரசிக்க வேண்டும்,குறிப்பாக காம்ப்ளிமென்ட் கொடுக்க வேண்டும். அதாவது eyebrow threading செய்தால் கூட நல்லாருக்கு,இல்லை என கமெண்ட் கொடுக்க வேண்டும்.இவையெல்லாம் நீங்கள் அவர்களை நுண்ணிப்பாக கவனிக்கிறீர்கள் என்ற என்ணத்தை உருவாக்கும்.(எல்லோரையும் கூர்ந்து கவனிக்க முடியாது பிடித்தவர்களை தவிர்த்து...)

#3. சர்ப்ரைஸ் கொடுப்பது உங்களுக்கான நெருக்கத்தை கூட்டும். பல அரேஞ் மேரேஜ்களில் இது போன்ற விஷயங்கள் அரிதுதான். அப்படி நடந்தாலும் பெற்றோர்களை கேட்டு கேட்டுத்தான் நடக்கும்.

#4. புதுப்பெண்கள் தங்களது கணவருடன் அதிக நேரம் செலவிட எண்ணுவார்கள். திடீரென வெளியே செல்லும் சூழலை ஏற்ப்படுத்தி கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

#5. எந்த நிலையிலும் கணவன் வீட்டார் முன் தன்னை விட்டுக்கொடுத்து பேசக்கூடாது என எண்ணுவார்கள், ஆனால் இப்போது கலாய்கிற பேரில் மனைவியை இறக்கி பேசிவிடுகிறார்கள், இந்த நவீன உலகில் இது போன்ற விஷயங்கள் பெண்களுக்கு பிடிக்காத ஒன்றும் கூட..

#weddingfun:கணவன்மார்கள் ஏன் இது போன்ற அழகிய தருணங்களை பெரிதாக கொண்டாடுவதில்லை.. ?? மனைவி மீதான அன்பும் நினைவும் எப்போதும் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தவே இந்த சிறு சிறு எதிர்பார்ப்புகள் உருவாகிறது என்கிறார்கள் வல்லுனர்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top