ஒவ்வொரு இந்தியனும் வரி கட்டுபவனே!!!
  • 10:16AM Sep 18,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 10:16AM Sep 18,2017 Chennai, Tamil Nadu 600003, India

சமீப காலமாய் அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஏற்பட்ட புரிதல் என்னவென்றால், இந்தியா உருப்படாமல் இருப்பதற்குக் காரணம் 90 சதவீதம் மக்கள் வரி கட்டாமல் இருப்பதுதான் என்பது.  நிஜமாகவே இவர்கள் எந்த வரியும் கட்டாமல் இருந்தார்களா என்றால், கட்டினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் என அனைவரின் சம்பளமும் அரசாங்கத்தாலேயே பிடிக்கப்பட்டு நேரடியாக செலுத்தப்படுவதால் அவர்கள் மட்டுமே உண்மையாக வரி கட்டுபவர்களைப் போலத் தெரிகிறது.  உண்மையைச் சொன்னால் அவர்கள் சம்பாதித்த பணத்திற்கும் சேர்த்து வரி கட்டுகிறார்கள் என்ற சொல்ல முடியுமே ஒழிய, இவர்கள் மட்டுமே வரி கட்டுபவர்கள் எனச் சொல்லிவிட முடியாது,

விவசாயிகள் வருமான வரி கட்டுவதில்லை என்று சொல்வது தவறு.  அவர்களின் வரி ஆதாரம் அவர்களது நிலம்.  நிலத்தின் அளவைப் பொறுத்து அவர்கள் கட்ட வேண்டிய வரியையும். அதில் அவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தையும் வைத்து கணக்கிட்டால் Gross Profit காட்ட முடியுமே தவிர, Net Profit காட்ட முடியாது. இது தவிர பயிர்க் காப்பீடு போன்ற விஷயங்களும் இருப்பதால், மற்றவர்கள் சொல்வது போல விவசாயம் Non-Taxable Income என்கிற வாதமே அடிப்படையற்றதுதான். ஒரு திறமையான ஆடிட்டர் அவர்களுடன் இருக்கும் பட்சத்தில், உண்மையான வரவு, செலவு கணக்குத் தணிக்கை நிகழ்த்தப்படுமானால் விவசாயிகள் எப்படி கடனாளிகளாகவே வாழ்கிறார்கள் என்பது புரியும்.

10,000, 15,000க்கு கீழ் சம்பாதிப்பவர்கள் பழைய கணக்கீட்டின்படி 45 சதவீதத்திற்கும் மேல்… இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இவர்கள் வருமான வரி கணக்கு காட்டவும், செலுத்தவும் தேவையில்லை, இவர்களுக்குள் சிறுதொழில் நுகர்வோரும் அடங்குவர்.

மத்திய, பெரு தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் தங்கள் நிறுவனம் துவங்கப்படும் போதே விதிமுறைகளின்படி Current Account துவங்க வேண்டியது உள்ளதால், கணக்கில் கோல்மால் செய்ய முடியுமே ஒழிய, முழுமையாக வரி செலுத்தாமல் தப்பிக்க முடியாது.  எப்படிப் பார்த்தாலும் மூலப்பொருள் கொள்ளளவு, தயாரிப்பு போன்றவற்றை காட்டியாக வேண்டியிருப்பதால் அதுவும் ஒரு அளவு தாண்டாது,

டாக்டர். எஞ்சினியர் போன்றவர்கள் பெரும்பாலும் பேருக்காவது கணக்கு காட்டிவிடுவது உண்டு. லோன் எலிஜிபிலிட்டி, ஐடி ரிடர்ன்ஸ் போன்ற சில எதிர்காலச் சலுகைகளுக்காக கணக்கு காட்டிவிடுவார்கள்.  முழுவதும் அல்லது பகுதி என்பது அவரவர் விருப்பம்.

வறுமைக் கோட்டிற்கும் கீழ் உள்ளவர்கள் வரி விதிப்பு வரம்புக்கு உட்பட மாட்டார்கள்.

இவர்கள் அனைவருமே வேறு விதத்திலும் வரி கட்டுகிறார்கள். சேவை வரி, கேளிக்கை வரி, கலால் வரி, தணிக்கை வரி, தூய்மை இந்தியா வரி என தங்களிடம் இருக்கும் ஒவ்வொரு பைசாவை செலவு செய்யும் போதும் அனைவருமே வரி கட்டிக் கொண்டுதான் இருக்கறார்கள்.  15 சதவீத மக்களின் உழைப்பில் இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற வாதம் என்றுமே உண்மையில்லை.

ஏனெனில், ஒவ்வொரு இந்தியனும் வரி செலுத்துபவனே…

 

     

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top