விரும்பும் வாழ்க்கையை வாழும் அமெரிக்க நாய்
  • 10:26AM Oct 20,2017 Tamil Nadu 635109, India
  • Written By Priyanka
  • Written By Priyanka
  • 10:26AM Oct 20,2017 Tamil Nadu 635109, India

நமக்கு மனசுக்கு பிடிக்குதோ இல்லையோ, பெரும்பாலும்  நாம கிடைச்ச வேலை செய்ஞ்சுட்டு தான் இருக்குறோம். சிலர் மட்டும் தான் தனக்கு பிடிச்ச வாழ்கை வாழறாங்கஇந்த நாய் போல.

CIA உளவு துறை பற்றி தெரியாத  ஆள்களே ரொம்ப குறைவு தான்அமெரிக்காவில், சில தினங்களுக்கு முன் CIA உளவு துறையின் பாம் கண்டுபிடிக்கும் பிரிவில் சேர்ந்தது  இந்த லூலூ லாப்ரடார் வகை நாய்.

பாம் தேடும் பயிற்சிகள் லூலூகு கொடுக்கப்பட்டது. ஆனால், வெடி மருந்துகளின் வாசம்  சிறிதுதும் லூலூ வுக்கு பிடிக்கவில்லைஅதிகாரிகளும் லூலூ வுக்கு உணவு விளையாட்டு காட்டினாலும் , லூலூ வுக்கு அந்த வேலையில் ஈடுபாடு இல்லை.

இறுதியாக, CIA உளவு துறை , லூலூ வெடி மருந்துகளின் வாசத்தில் இருப்பதை விட , வீட்டில் ஓடியாடி விளையாடட்டும்  என்று முடிவு செய்தது. லூலூ வை ஒரு குடும்பம் தத்துஎடுத்து , அதற்கு பிடித்த வாழ்க்கையை கொடுத்துள்ளார்கள்.

தனக்கு பிடித்த சிவிலியன் வாழ்க்கைக்கு திரும்பி விட்டது லூலூ. 

மனதை உற்சாகமாக வைத்திருங்கள். மகிழ்ச்சியான நிலையில் தான் பணியில் முழுத்திறனை வெளிப்படுத்த முடியும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top