#chilli chicken: கறிக்கோழி சில்லியா.? நாட்டு கோழி சில்லியா.? எண்ணையில் பொரிய பொரிய எச்சி ஊற வைக்கும் பெருந்துறை 'ஜெய்' சில்லி.!
  • 10:49AM Jul 06,2019 Perundurai
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 10:49AM Jul 06,2019 Perundurai

சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல ஆச்சுனா போதும் நம்ம ஊரு சின்ராசுகல கையில பிடிக்க முடியாது. ஏதாவது ஒன்னு கார சாரமா சாப்பிட்டே தீரணும். சைடு டிஸ்க்கு காரம் சாப்புடற கேங் தனி, சாதாரணமாவே காரம் சாப்புடற கேங் தனி. இப்படி பல கேங்குகள் ஒன்னு சேர்ந்து போற ஒரே இடம் இந்த மாதிரி சைனீஸ் புட் கடையா தான் இருக்கும். ஈரோடு பக்கம் வந்தீங்கனா, அப்படியே பெருந்துறைக்கும் வந்துட்டு போங்க. நீங்க சப்பிட வேண்டிய அயிட்டம் நிறையா கிடைக்கும்.

பெருந்துறை, காஞ்சிகோவில் ரோடுல, அண்ணா சிலை பக்கத்துலையே இருக்கு 'ஜெய் சில்லி சிக்கன்'ன்னு சொல்லி ஒரு கடை. வழக்கமா ஒரு ரெண்டு மூணு வகையான சாப்பாடு அயிட்டம் போட ஆரம்பிச்சு, போக போக கடை டெவலப் ஆகும் போது, அத பெரிய ஹோட்டலாவே மாத்திருவாங்க. ஆனா எனக்கு தெரிஞ்சு ஒரு 15  வருசத்துக்கும் மேல, சிக்கன் சில்லி, காலிபிளவர் சில்லி, ஆட்டுகால் சூப் இத மட்டுமே நம்பி ஒருத்தர் கடை நடத்திட்டு வராருன்னா அது எவ்வளவு பெரிய விஷயம்.

இந்த 3 வகையான வெரைட்டிக்கு இவரு கடையில கொடுக்குற டேஸ்ட் வேற எங்க போனாலும் கிடைக்காது. அந்த அளவுக்கு சுவையில கட்டி போட்டு வெச்சிருக்காரு. 90s கிட்ஸ்ல ஆரம்பிச்சு, பின்னாடி 60s கிட்ஸ் வரைக்கும், முன்னாடி 20s கிட்ஸ் வரைக்கும் எல்லாருக்கும் புடிச்ச இடமா இந்த கடை இருக்கு. நீங்க நினைக்குற மாதிரி பெருசா எல்லாம் இருக்காது. சாதாரணமா ஒரு ஓட்டு வீடு மாதிரி இருக்கும். இடம் கிடச்சா உக்காந்து சாப்பிடலாம். இல்லைனா கையேந்தி பவன் தான்.

தற்செயலா இந்த சில்லி கடைக்கு சாப்பிட வர வெளியூருகாரங்க எல்லாம், இது கறிகோழி சில்லி தானா.? இல்லா நாட்டு கோழியா..? நாட்டுகோழி டேஸ்ட் இருக்கேன்னு சொல்லி ருசிச்சு சாப்பிடறாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட் இல்லாமையா வெறும் சில்லிய மட்டுமே மூலதனமா வெச்சு 15 வருசத்துக்கும் மேல தொழில் பண்ணுவாரு. என்னைக்கும் டேஸ்ட் மட்டும் மாறவே மாறாது. அதனால தான் இத்தன வருஷம் நிலைச்சு நிக்குறாரு. எத்தனையோ கடைகள் போட்டிக்கு வந்தாலும், தனக்குன்னு இருக்க தனித்துவம் மாறாம இருந்தா எத்தனை போட்டி வந்தாலும் சமாளிக்கலாங்கறதுக்கு 'ஜெய் சில்லி' ஒரு எடுத்துக்காட்டு. | பரோட்டாக்கு Non Veg எலும்பு குழம்பு - பெருந்துறையை கலக்கி வரும் Hotel Lakshmi Vilas!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top