நாம் பள்ளி படித்த காலகட்டத்திலேயே ஏகப்பட்ட சீருடை அணிந்தோம். இப்போதெல்லாம் பள்ளிகள் அடிக்கடி சீருடையின் நிறம் மற்றும் வடிவத்தில் மாற்றம் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை எதிலும் மாற்றம் செய்யாத ஒரு பள்ளி இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ?
இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்ட் ஹாஸ்பிடல் என்று அழைக்கப்படும் பள்ளியில் ஏறத்தாழ 460 ஆண்டுகளாக ஒரே சீருடையே மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. பாரம்பரியமிக்க இந்த பள்ளியில் 11 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 1000 மாணவ மாணவிகள் இன்றும் படித்து வருகின்றனர்.
ஏழை எளிய மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பல நூறு ஆண்டுகள் கடந்தும் பிரம்மாண்டமாய் இப்போதும் தனது பணியை செய்து வருகிறது. பாரம்பரியமிக்க சீருடை என்பதால் இன்றும் அதற்கு தனி மரியாதை வழங்கப்படுகிறது. இந்த புகழ் மிக்க சீருடை இனி வரும் காலங்களிலும் மாற்றப்படாது என்று தெள்ளத்தெளிவாக அங்கு இருப்பவர்கள் கூறுகின்றனர்.