#TET: ஒரே அரசாணையில் ஒட்டுமொத்த என்ஜினீரியர்களுக்கும் கிடைத்த உடும்புபிடி! இனிவரும் காலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பொறியாளர்கள் தான்..! நிரந்தர தீர்வா?
  • 00:30AM May 23,2020 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 00:30AM May 23,2020 Chennai

என்ஜினீயரிங் படித்தவர்களும்  இனி Teacher eligibility test எனும்  ஆசிரியர் தகுதித் தேர்வெழுதி அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணி அமர்த்தப்படலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..இது  பொறியாளர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டாலும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மத்தியில் சற்றே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பி.இ. படித்தவர்கள் பி.எட் படிக்க 2015-16லேயே அனுமதிக்கப்பட்டிருந்தாலும், டெட் எழுத அனுமதிக்கப்படவில்லை.தற்போது சமநிலை வழங்கி அரசாணை வெளியானதால், பி.இ நிறைவு செய்தவுடன் பி.எட் படித்தவர்கள் டெட் எழுதி 6-8ஆம் வகுப்பிற்கு கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியாகியுள்ளது. ஏற்கனவே TET தேர்வில் தேர்வாகி மூன்று வருடமாக போஸ்ட்டிங் போடாமல் இருக்கும் பட்சத்தில் இது போன்ற தகவல்கள் சற்றே வியப்பு கலந்த பயத்தை ஏற்படுத்துவதாக TET தேர்விற்கு பயிலும் மாணவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

வேலையில்லா திண்டாட்டத்தில் அதிகமாக சிக்கி திணறுபவர்கள் பொறியாளர்களே,வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் மூச்சு விடாமல் தொடர்ந்து ஒருவசனம் பேசுவார். அதுவே நடைமுறை..பொறியியல் படிக்க, இருக்கும் நில புலம் எல்லாம் அடகு வைத்து விற்று, படித்து முடித்த பின்னர் ஒரு செண்டு நிலம் கூட வாங்க முடியாமல் திண்டாடும் நிலை தான் நிலவுகிறது. என்னதான் என்ஜினீயரிங் படித்தாலும் வீட்டிற்காக, ஏதோ ஒரு கிடைக்கும் வேலையை முழு மூச்சாக இறங்கி செய்தாலும்,சுற்றி இருப்பவர்கள் என்ஜினீயரிங் படித்துவிட்டு,இப்படி ஒரு வேலை பார்க்கிற என சொல்லும் போது ஒட்டுமொத்த நம்பிக்கையும் காணாமல் போகும்.இதிலும் கடன் வாங்கி படித்தவன் நிலையெல்லாம் வாழ்க்கையில் இண்டர்வல் வரை போராட்டமாகத்தான் இருக்கும். அப்படி இப்படினு ஒருவேலைக்கு போயி வாழக்கையில் செட்டில் ஆகும் போது அவனுக்கு வயது 30 கடந்திருக்கும். வேலை தேடி அலைந்த படலம்,பெண் தேடி அலையும் படலமாக தொடரும்.. 

என்ஜினீயரிங்கில் பிடித்த பிரிவை படுச்சுக்கோ, காசு பார்க்கவேணும் என்றால் ஐடி வேலைய புடுச்சிக்கோ என்பதே பலரது பாதை. மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ்,கெமிக்கல் என்ஜினீயரிங் என எதை படித்தாலும் நல்ல சம்பாதிக்கிறவன் இருப்பது ஐடி உத்தியோகமே! இங்கு ஐடி ஊழியர்களை குறை சொல்லபடவில்லை, மற்ற துறைகளில் எதிர்பார்த்த ஊதியமும் வேலைவாய்ப்பும் குறைவாக இருக்க என்ன காரணம்? அல்லது அப்படி வாய்ப்புகள் இருந்தும் நமது பொறியாளர்கள் அந்த துறையை பணியாற்ற தேர்ந்தெடுக்கவில்லையா? என்ஜினீயரிங் முடித்துவிட்டு லட்சக்கணக்கான மாணவர்கள் வெளியே வந்தாலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு மட்டுமே பன்னாட்டு கம்பெனிகளில் வாய்ப்பு கிடைக்கிறது. மீதி இருப்பவர்களின் ஆற்றலும் அறிவும் வீணடிக்கப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட பொறியாளர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. நாடுமே இதன் விளைவுகளை சந்திக்கிறது..என்னதான் அரசு சுயதொழில் குறித்த பல திட்டங்களை கொண்டுவந்தாலும் சமூகவலைத்தளங்களும் ஊடகங்களும் அதை சரியாக அடித்தட்டமக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை.. அப்படி மக்கள் கேள்விப்பட்டாலும் அதில் உள்ள சிக்கல்களை பார்த்து ஒதுங்கிவிடுகிறார்கள்.       

ஒரு சில தினங்களுக்கு முன்னர் கோவை மாநகராட்சியில் நடைபெற்ற துப்புரவுப் பணியாளர்களுக்கான நேர்காணலில் ஆயிரக்கணக்கான என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தது நாட்டின் உண்மை நிலையை பிரதிபலித்தது. ஆகையால் துப்புரவு பணியில் வழங்கப்படும் ஊதியம் கூட அவர்களுக்கு தற்சமயம் எந்த தனியார் நிறுவனங்களில் இருந்தும் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். இப்படி சூழல் இருக்க தமிழக அரசிடம் இருந்து ஒரு அரசாணை வருகிறது, என்னவென்றால் என்ஜினீயரிங் படித்தவர்களும்  இனி ஆசிரியர் தகுதித் தேர்வெழுதி அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணி அமர்த்தப்படலாம் என்று...என்னதான் பொறியாளர்கள் மத்தியில் இது வரவேற்கப்பட்டாலும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களின் நிலை என்ன? அவர்களுக்கான வாய்ப்பு சுருக்கப்டுகிறதா? ஆசிரியர் வேலைக்கு என்ஜினீரிங் விண்ணப்பிக்கலாம் என்றால் அப்போ என்ஜினீரிங் வேலைக்கு டீச்சர் அப்ளை பண்ணலாமா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top